/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
விகாஸ்புரி ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவிலில் முருகப்பெருமான் திருக்கல்யாணம்

அக் 28, 2025

விகாஸ்புரி ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவிலில் முருகப்பெருமான் திருக்கல்யாணம்
புதுதில்லி: விகாஸ்புரி சி பிளாக்கில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவிலில் கந்த சஷ்டி விழா இரண்டு நாட்கள் ( 27-28 அக்) நடைபெற்றது. முதல் நாள் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து, சங்கல்பம், கலச ஸ்தாபனம், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
இரண்டாம் நாள், செவ்வாய் கிழமை (அக்-28) முருகப்பெருமானின் திருக்கல்யாண உற்சவம் மிகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஹோமம், மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மூகாம்பிகை கோவில் பக்தர்கள் செய்திருந்தனர்.
தமிழ் மாதமான ஐப்பசியில் அமாவாசைக்குப் பிறகு நடைபெறும் கந்த சஷ்டி விழா, முருகப்பெருமானின் திருக்கல்யாணம் நிறைவடைகிறது. ஆறாம் நாள் ஸ்கந்த சஷ்டி விரதம் மற்றும் சூரசம்ஹாரம் முடிந்து ஏழாம் நாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. முக்கியமான முருகன் கோவில்களில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும்.
திருக்கல்யாண நாளில், முருகப்பெருமான் தேவசேனாவை மணக்கிறார். இந்த தெய்வீக திருமணம் முருக பக்தர்களால் அனைத்து பாரம்பரிய சடங்குகளுடன் கொண்டாடப்படுகிறது.
திருக்கல்யாண நாளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதற்கு முந்தைய நாள் சூரசம்ஹாரம், இந்த புனித நிகழ்வும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது. முருகப்பெருமான் ஸ்கந்தா, சுப்ரமணியர், கார்த்திக் மற்றும் கார்த்திகேயர் என்றும் அழைக்கப்படுகிறார்.
-- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்