தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/நொய்டா கோவில்களில் மஹா சிவராத்திரி

நொய்டா கோவில்களில் மஹா சிவராத்திரி

நொய்டா கோவில்களில் மஹா சிவராத்திரி


பிப் 27, 2025

Follow on GoogleFavourite on Google

பிப் 27, 2025


Latest Tamil News
அ நிறம் | அளவு

மஹா சிவராத்திரி, பார்வதி தேவி மற்றும் சிவபெருமானின் தெய்வீக திருமணத்தை சித்தரிக்கிறது. முப்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான், அதன் செக்டர் 62 ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்தில், 26 புதன் காலையில் 8.30 மணிக்கு மகா மிருத்தியுஞ்சய ஹோமம், நடந்தன. அதைத் தொடர்ந்து ருத்ர ஜபம், சங்காபிஷேகம், நான்கு கால பூஜைகள் செய்து, மஹா சிவராத்திரியை வேத மரபுப்படி கொண்டாடப்பட்டது.

'மஹா ம்ருத்யுஞ்ஜய' ஹோமம் நீண்ட, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ கர்ம தோஷங்களிலிருந்து விடுபட செய்யப்படுகிறது. முதலில் பிரதோஷ பூஜையும், அதைத்தொடர்ந்து முதல், இரண்டாவது கால பூஜைகள் 26 மாலையிலும், மூன்றாவது மற்றும் நான்காவது கால பூஜை (முடிவு பகுதி) பிப்ரவரி 27 தேதி அதிகாலையில் நடை பெற்றது.


மேலும், பிரிவு 22ல் அமைந்துள்ள வி பி எஸ் நிர்வகிக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் இதே போன்ற நிகழ்ச்சிகள் நடை பெற்றது. இக் கோவிலில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக பிரதோஷம் மற்றும் மஹா சிவராத்திரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன, என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து பூஜைகளும் ஹோமங்களும் வி.பி.எஸ். ஆஸ்தான வாத்தியார்கள் ஸ்ரீராம், மேற்பார்வையிலும், வழிகாட்டுதலிலும், கோவிலின் மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ரா, ஜெகதீசன் சிவாச்சார்யர், கணபதி, விக்னேஷ் ஆகியோரின் உதவியுடன் நடந்தன. நொய்டாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.


கோவில் நிர்வாகம், நன்கொடையாளர்கள், ஸ்பான்சர்ஸ், தன்னார்வலர்கள், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் மண்டலி, மற்றும் உறுப்பினர்கள் பாலாஜி, ராஜு ஐயர், ராமசேஷன், ஸ்ரீதர் ஐயர், ராஜேந்திரன், வெங்கட்ராமன், ராதாகிருஷ்ணன், சுவாமினாதன், இந்த திருவிழாவை ஒரு பெரிய முறையில் நடத்துவதற்கு பராமரிப்பு ஊழியர்கள், அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர் .

- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us