
சுப சித்தி விநாயகர் ஆலயமும் ஸ்ரீ ஹயக்ரீவ அமைப்பும் சேர்ந்து கதாமிர்தம் என்ற தலைப்பில் மாணிக்கவாசகர் பற்றிய ஹரிகதாவை (6/9/2025) சனிமாலை ஏற்பாடு செய்திருந்தனர். இதனை டில்லி வாழ் மருத்துவம் படிக்கும் இரு சகோதரிகள்.(அத்திகிரி சகோதரிகள்) விரஜா , வசுதா .மிக அருமையாக பாட்டும் கதையுமாக கலாட்க்ஷேபம் செய்தார்கள்.வயலினில் அரவிந்த் நாராயணனும் மிருதங்கத்தில் அபிஷேக் அரவிந்தரும் உடன் வாசித்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார்கள்.
சிவபுராணத்தின் இறைவனின் லீலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்.அதுவும் இந்த ஆவணி மூலத் திருநாளில் மதுரையில் நடைபெறும் இரு நிகழ்வுகளை பிட்டுக்கு மண் சுமந்த லீலை மற்றும் நரியை பரியாக்கிய லீலையை தேர்ந்தடுத்து அதனை ரசிக்கும் படியாக கோர்வையாக பின்னிப் பிணைந்து அளித்தது பாராட்ட வேண்டிய தொன்று. அன்றைய தினம் ரசிகர்களாகிய பக்த ஜனங்களுக்கு நல்ல ஆன்மிக விருந்தாக இருந்தது.
இந்த மாலைக்கு R.ராஜ்குமார் பாலசுப்ரமணியம் ( Joint secretary, Lok sabha secretariat) சிறப்பு விருந்தினராக வருகை தந்து கலைஞர்களை கெளரவித்தார்கள்.தனது உரையில் இரு குழந்தைகளின் தமிழ் உச்சரிப்பு மற்றும் ஆன்மீக நாட்டம் சங்கீத வளமை என்று அவர்களின் திறமைகளை பாராட்டிப் பேசினார்.
மேலும் கோவிலும், ஹயக்ரீவ அமைப்பும் இது போன்ற நற்காரியங்களை தொடர்ந்து செய்து வருவது மகிழ்ச்சி என்றார்.கோவில் சார்பில் விஸ்வநாதன்,ரகுராமனும் ஹயக்ரீவா சார்பில் சுப்ரமணியரும் சிறப்பு விருந்தினரை கவுரவித்தனர்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி.