/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
நொய்டா முருகன் கோவிலில் இசை கச்சேரி
/
நொய்டா முருகன் கோவிலில் இசை கச்சேரி

நொய்டா செக்டர் 62, ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில், அனகா மணிகண்டனின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது. அரவிந்த் நாராயணன் - வயலின், விக்னேஷ் ஜெயராமன் மிருதங்கம் வாசித்தனர் . இந்த இசை நிகழ்வை ஷண்முகானந்தா சங்கீத சபா மற்றும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் (வி.பி.எஸ்) இணைந்து ஏற்பாடு செய்தனர் .
விழாவிற்கு வந்திருந்த தலைவர் ஷண்முகானந்தா சங்கீத சபா சி.எஸ்.வைத்தியநாதனை, பத்ம ஸ்ரீ விருது இந்த ஆண்டு பெற்றதை முன்னிட்டு வி.பி.எஸ். தலைவர் ரவி பி சர்மா கெளரவித்தார். அனைத்து கலைஞர்களையும் சி.எஸ் வைத்தியநாதன் கெளரவித்தார். தில்லி தமிழ் சங்கச் செயலாளர் முகுந்தன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். கர்நாடக இசையில் இளம் திறமைகளை ஊக்குவிப்பதற்க்காக அமைப்பாளர்களை பாராட்டினார். மேலும், அனகாவிற்க்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என கூறினார். வி.பி.எஸ்ஸின் மூத்த உறுப்பினர்கள் ஆர்.முகுந்தனை கௌரவித்தனர்.
முன்னதாக, ஷண்முகானந்தா சங்கீத சபா செயலாளர் எஸ் கிருஷ்ணசாமி, இசை ஆர்வலர்களை வரவேற்று, கலைஞர்களை அறிமுகப்படுத்தினார். குருவாயூர் டிவி மணிகண்டன், மயூர் விஹார் பிரிவு 2 எம் வல்லீசன், ஸ்ரீ சுவாமிநாத சேவா சமாஜ், ஆர் கணேஷ், இஷ்ட சித்தி விநாயகா கோவில், கே கோபாலகிருஷ்ணன், ஹயக்ரீவா, குரு சரண், மற்றும் எஸ் வெங்கடேஷ், (செயலாளர், ராமகிருஷ்ணாபுரம் சவுத் இந்தியன் சொசைட்டி) நிகழ்ச்சிற்கு வந்திருந்தனர்.
வி.பி.எஸ் துணைத் தலைவர் வி விஸ்வநாதன், இந்த இசை கச்சேரியின் தனது கருத்துக்களை வழங்கினார். அதிக எண்ணிக்கையிலான இசை ஆர்வலர்கள், பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் இசை கச்சேரியில் கலந்து கொண்டனர்.
ஷண்முகானந்தா சங்கீத சபா கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக இசை ஆர்வலர்களுக்கு சேவை செய்து வருகிறது, அதே சமயத்தில் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் நான்கு தசாப்தங்களாக பக்தர்களுக்கு சேவை செய்து வருகிறது,
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்