
'ஊரில் சொந்த இடம் இல்லாவிட்டாலும், 'உத்திரம்' நட்சத்திரத்தில் ஒரு பிள்ளையாவது இருக்கணும்', என்கிற பழமொழியை நாம் எல்லோரும் அறிவோம். 'அழகு' என்றாலே நமக்கு ஞாபகம் வருவது முருகக்கடவுள். காரணம், அறுபடை வீடுகளில் ஆரம்பித்து, தமிழ் நாடுகளில் மட்டுமல்லாமல், வெளிநாடு, இந்தியாவில் இருக்கும் இதர முருகன் கோவில்கள், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் இருக்கும், நொய்டா, செக்டார் 62 முருகன் கோவில். இங்கு பால்குடம், காவடி, ஸ்ரீ கார்த்திகேயனுக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் பாடல்கள் என 'பங்குனி உத்திர திருவிழா' வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலையில், காவடி மற்றும் பால்குடம் ஆகியவை கோவில் வளாகத்திற்குள் பக்தர்களால் எடுத்துச் செல்லப்பட்டது. பூஜைகளும் கோயில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா, மற்றும் மோஹித் மிஸ்ரா ஆகியோரின் உதவியுடன் செய்யப்பட்டது. பக்தர்கள், ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி, கந்தர் அனுபூதி மற்றும் இதர ஸ்லோகங்கள் மட்டுமல்லாமல், முருகன் பற்றிய பல்வேறு பாடல்கள் பாடுவதைக் காண முடிந்தது. ஸ்ரீ கார்த்திகேயனுக்கு பலவிதமான வண்ண மலர்களுடன் அல்லாமல், கோவில் வளாகத்தில் தோட்டத்தில் உள்ள பூக்களால் அலங்கரிக்கப்பட்டன. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களுக்கு மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
முருகனை போற்றிய 'முருகன் மாலை' - ஜி இளங்கோவன் வழங்கிய வாய் பாட்டு, கோவில் நிர்வாகம், ராமகிருஷ்ணாபுரம் சவுத் இந்தியன் சொசைட்டி யுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. பக்க வாத்தியத்தில் ரகுராம் : புல்லாங்குழல் மற்றும் சந்திரசேகர் மிருதங்கம் வாசித்தார். பிரம்மஸ்ரீ யக்யராம பாகவதரால் அனைத்து கலைஞர்களும் கெளரவித்தார்.
இக்கோவிலில் இருக்கும் முருகனை 'முருகனின் மறுபெயர் அழகு' என்றே கூறலாம். நொய்டா கோவில் முருகனை காண செல்வதற்கு வெற்றி மேல் வெற்றி நிச்சயம். இக்கோவிலின் கோபுரத்தை காண வருவோர்க்கு 'கோடி புண்ணியம்'. நொய்டா முருகன் கோவில், வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் (வி பி எஸ்) நிர்வகித்து வருகிறது.-
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்