ஏப் 30, 2026

அ நிறம் | அளவு
பிரதோஷத்தை முன்னிட்டு 'ருத்ராபிஷேகம்' ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில், செக்டர் 62 , நொய்டாவில் நடந்தன. சித்திரை பிரதோஷத்தில் 'ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரருக்கு பித்தளையில் 'நாகாபரணம்' முதல் தடவையாக சாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் சிவனை போற்றிய ஸ்லோகங்களும் பாடல்களும் பாடினார். அனைத்து பூஜைகளும் மணிகண்டன் சர்மா மற்றும் மோஹித் மிஸ்ரா செய்தனர். மஹா தீபாராதனை க்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்
