தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/நொய்டா கோவிலில் 'பிரதோஷம்

நொய்டா கோவிலில் 'பிரதோஷம்

நொய்டா கோவிலில் 'பிரதோஷம்


ஆக 26, 2026

Follow on GoogleFavourite on Google

ஆக 26, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

நொய்டா கோவிலில் 'பிரதோஷம்
சிவனுக்கு உகந்த ஸ்ராவண மாதத்தில் வரும் பிரதோஷம் சக்திவாய்ந்த ஆன்மிக நாட்களுள் ஒன்றாகும். இதனை முன்னிட்டு கடைசி பிரதோஷமாக அமைந்துள்ளது “பௌம பிரதோஷம்”, செவ்வாய் கிழமை அன்று மிக சிறப்பாக செக்டர் 62 , நொய்டாவில் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் கொண்டாடப்பட்டது. பிரதோஷத்தை முன்னிட்டு, ருத்ராபிஷேகம் முடிந்தவுடன் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் மற்றும் ஸ்ரீ நந்தி அருள் பாலித்தனர் .
பிரதோஷ நேரத்தில் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டு 'ஓம் நமச்சிவாய' மந்திரத்தை ஜபிப்பது மட்டுமல்லாமல் சிவனை போற்றிய பாடல்களையும் பாடுவதை காண முடிந்தது. செவ்வாய் கிழமையில் பிரதோஷ தினத்தன்று சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் கடன் தொல்லைகள், ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் திருமண தடைகள் நீங்கும், என்பது ஒரு நம்பிக்கை.
அனைத்து பூஜைகளும் கோவில் வாத்தியார்கள் ஸ்ரீ மணிகண்டன் சர்மா மற்றும் ஸ்ரீ மோஹித் மிஸ்ரா செய்தனர் . மகா தீபாராதனைக்கு பிறகு பிரசாதம் பக்தர்களுக்கு விநியோகப்பட்டது.
- நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us