/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
க்யாலா ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் விழா
/
க்யாலா ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் விழா
க்யாலா ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் விழா
க்யாலா ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் விழா
ஜூலை 21, 2024

புதுடில்லி : க்யாலா ஜே. ஜே.காலனியில் அமைந்திருக்கும் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவிலில், ஆடி மாதத்தை ஒட்டி, கூழ் ஊற்றும் விழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து, ஹஸ்தல் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம சத்சபா குழுவினர் லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தனர். இதையடுத்து, தீபாராதனை காட்டப்பட்டது.
பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். அம்மனுக்கு கூழ் செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஆடியில் அம்மனுக்கு கூழ் செய்து பக்தர்களுக்கு வழங்கினால், அன்னையின் மனம் குளிர்ந்து அருள் தருவாள் என்பது ஐதீகம்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்