தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ராகு - கேது பெயர்ச்சி

ராகு - கேது பெயர்ச்சி

ராகு - கேது பெயர்ச்சி


ஏப் 27, 2025

Follow on GoogleFavourite on Google

ஏப் 27, 2025


Latest Tamil News
அ நிறம் | அளவு

ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு புதுதில்லி துவாரகாவில் உள்ள ஸ்ரீராம் மந்திரில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். மங்கள ராகு கேதுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

18 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு பகவான் ஏப்ரல் 26ம் தேதி சனிக்கிழமை மாலை 4:20 மணிக்கு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி செய்தனர்.


அதிகாலை முதல் கலச ஸ்தாபனம், சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, ருத்ர பாராயணம், நவக்கிரஹ ஹோமம் ஆகியவை சரவணன் சாஸ்திரிகள் தலைமையில் நடைபெற்றன. ஏராளமானோர் சிறப்பு பரிகார பூஜைகளிலும் கலந்துகொண்டனர்.


ராகு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.


- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us