/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் இராம நவமி கொண்டாட்டம்
/
துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் இராம நவமி கொண்டாட்டம்
ஏப் 18, 2024

இராம நவமி - விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகக் கருதப்படும் இராமனின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகையாகும். இந்த விழா, வசந்த காலத்தில் சைத்ர நவராத்திரியின் ஒரு பகுதியாகும். 'சுக்ல பட்ச' அல்லது வளர்பிறையில் இந்து சந்திர ஆண்டின் சித்திரை மாதத்தில் ஒன்பதாம் நாள் வரும் நவமியில் கொண்டாடப்படுகிறது. அதனால் இது சித்திரை மாத சுக்லபட்ச நவமி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் ஒன்பதாம் நாளின் இறுதியில் சித்திரை-நவராத்திரி கொண்டாடப்படுகிறது
புது தில்லி துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் காலை 08.00 மணி முதல் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதர்சன ஹோமம், ராம நாம தாரக ஹோமம், சம்க்ஷேப ராமாயண ஹோமம் மற்றும் பக்தர்களால் சகஸ்ரநாம அர்ச்சனையும் பக்தர்களால் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமனின் தரிசனம் பெற்றனர். அன்னதானத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்