
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நமது 77 வந்து குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.அரசு சார்பிலும், பள்ளி கல்லூரிகள் சார்பிலும் கொண்டாடப்படுவதோடு பொதுநல அமைப்புகள் குடியிருப்பு வளாகங்களிலும் கொண்டாடப்படுவதை பார்க்கிறோம்.
அதன்படியே தலைநகர் கிழக்கு தில்லியில் பிரசாந்த் குடியிருப்பு வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. அந்த பகுதி காவல்துறை உயர் அதிகாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குழந்தைகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மூத்த தலைமுறையினருக்கு மரியாதையுடன் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. அனைத்து குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன..குளிரையும் பொருட்படுத்தாது நாட்டுப்பற்று டன் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு ஜிலேபியுடன் வழங்கப்பட்டது.இத்தகு விழாக்கள் நாட்டு பற்றை ஊக்குவிக்கிறது.இளைய சமுதாயத்தை உணர வைக்கிறது.நடைமுறைவாழ்க்கையில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வைக்கிறது.
- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் மீனா வெங்கி
