/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ஜூலை 7ல் ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி கோவில் கும்பாபிஷேகம்
/
ஜூலை 7ல் ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி கோவில் கும்பாபிஷேகம்
ஜூலை 7ல் ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி கோவில் கும்பாபிஷேகம்
ஜூலை 7ல் ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி கோவில் கும்பாபிஷேகம்
ஜூன் 27, 2025

புது தில்லி வட மேற்கு பகுதியில் உள்ள கேசவ்புரத்தில் ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி கோயில் அமைந்துள்ளது. இது ஒரு சிறிய ஆனால் அழகான கோவில் மற்றும் விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி கோயில் புது தில்லியில் உள்ள முக்கியமான விநாயகர் கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஜூலை 7ம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கும்பாபிஷேகம்
நிகழும் மங்களகரமான விஸ்வாவஸூ வருஷம், ஆனி மாதம் 23ம் தேதி (7.7.2025) திங்கட்கிழமை, கிருஷ்ண பக்ஷ துவாதசி திதியும், அனுராதா நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுப தினத்தில், காலை 8.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் சிம்ம லக்னத்தில் சுப வேளையில், அருள்மிகு ஐஸ்வர்ய மகா கணபதி ஆலய புணருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், பக்த கோடிகள் அனைவரும் இதில் கலந்து கொண்டு ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதி திருவருள் பெற்று சகல செல்வங்களும் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நிதி உதவி
கோயில்கள் திருப்பணிக்கு நிதி உதவி செய்வது ஒரு சிறந்த தானம் ஆகும். நன்கொடையாளர்கள் தங்களால் இயன்ற அளவு நிதியுதவி செய்வதன் மூலம் இந்த புண்ணிய காரியத்தில் பங்கு கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும் :
டி. என். சிவராமகிருஷ்ணன், தலைவர், ஆஸ்திக சமாஜம், கைபேசி : 93508 99916
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்