செப் 17, 2026

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பத்மபூஷண், கேப்டன் விஜயகாந்தின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் முனைவர் ஜி. சிவபாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. தே.மு.தி.கழகத்தின் தில்லி மாநில செயலர் முனைவர் டி. நாகராஜன் வரவேற்புரையாற்றினார்.
“மனித நோய மாமணி - கேப்டன்” என்ற தலைப்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சத்யா அசோகன், புரட்சிக் கலைஞர் - கேப்டன் என்ற தலைப்பில் தில்லி பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியை வி. ஆனந்தி, எட்டாம் வள்ளல்-கேப்டன் என்ற தலைப்பில் சங்கத் துணைத் தலைவர் செல்வராஜ் மகேந்திரன், ஏழைகளின் - கேப்டன் என்ற தலைப்பில் மா. சேதுராமலிங்கம், உயர்ந்த மனிதர் - கேப்டன் என்ற தலைப்பில் தில்லிக் கம்பன் கழக நிறுவனர் கே.வி.கே. பெருமாள் உரையாற்றினர்.
சங்கத்தின் இணைச் செயலாளர் இரா. இராஜ்குமார் பாலா அவர்கள் கவிதை வாசித்தார். நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நடிகர் ரமேஷ் கண்ணா, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், ரமணன், இயக்குநர், சித்ரா லட்சுமணன், ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி எ. நடராஜன் ஆகியோர் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தனர்.
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வே. இளஞ்சோழன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, பொருளாளர் பாலமூர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
