ஆக 06, 2026

பள்ளி குழந்தைகள் நொய்டா கோயிலுக்கு வருகை
நொய்டா, செக்டர் 62-இல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா திருக்கோயிலுக்குச் சென்று, தெய்வங்களின் அருளாசியைப் பெற்றனர்.
புனிதமான சிராவண மாதத்தில் பலத்த மழை இருந்த போதிலும் குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து வந்த பள்ளி நிர்வாகம், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் இந்த முயற்சியை கோயில் நிர்வாகம் மனமாரப் பாராட்டியது. இந்த அர்த்தமுள்ள ஆன்மிகப் பயணம், இந்திய கலாசாரத்தின் செழுமை, ஆன்மிகம் மற்றும் மத பாரம்பரியங்களை குழந்தை செல்வங்களுக்கு அறிமுகப்படுத்தும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
சிறுவர்கள் பக்தியுடனும் பணிவுடனும் ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா முன் பிரார்த்தனை செய்த காட்சி, அங்கு இருந்த அனைவரின் மனதிலும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் நிரப்பியது. அவர்களின் களங்கமற்ற நம்பிக்கையும் தூய பக்தியும், கோயிலில் இருந்த அனைத்து பக்தர்கள் உள்ளங்களிலும் அமைதியையும் பேரானந்தத்தையும் ஏற்படுத்தியது. அனைத்து குழந்தைகளுக்கும் கோவில் வாத்தியார் ஸ்ரீ மணிகண்டன் சாக்லேட் கொடுத்தார்.
-நொய்டாவில் இருந்த வெங்கடேஷ்
