/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ஸ்ரேஷ்டா ஹரிஹரனின் கர்நாடக வாய்ப்பாட்டு கச்சேரி அரங்கேற்றம்
/
ஸ்ரேஷ்டா ஹரிஹரனின் கர்நாடக வாய்ப்பாட்டு கச்சேரி அரங்கேற்றம்
ஸ்ரேஷ்டா ஹரிஹரனின் கர்நாடக வாய்ப்பாட்டு கச்சேரி அரங்கேற்றம்
ஸ்ரேஷ்டா ஹரிஹரனின் கர்நாடக வாய்ப்பாட்டு கச்சேரி அரங்கேற்றம்
அக் 27, 2024

புதுதில்லி லோதி சாலையில் அமைந்துள்ள சி.டி .தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்திய சர்வதேச மையத்தில், 26 அக்டோபர் மாலை கர்நாடக பாரம்பரிய இசை அரங்கில் வளர்ந்து வரும் நட்சத்திரமும், புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர் பிரசாந்த் கோபிநாத பாயின் மாணவி ஸ்ரேஷ்டா ஹரிஹரனின் வாய்ப்பாட்டு கச்சேரி அரங்கேற்றம் மிக விமரிசையாக நடைபெற்றது. இசை ஆர்வலர்களுக்கு ஒரு தெய்வீக விருந்தாக இருந்தது.
அரங்கேற்றம் என்பது ஒரு கிளாசிக்கல் கலை வடிவ மாணவரின் முதல் தனி பொது நிகழ்ச்சியாகும். அது நடனம் அல்லது இசை. அதன் நோக்கம், பல வருட கற்றலுக்குப் பிறகு அந்த கலை வடிவத்தில் மாணவரின் திறமையை வெளிப்படுத்துவதாகும். இது எதிர்கால மேடை நிகழ்ச்சிகளுக்கான பாதையை அமைக்கிறது, உயர் கலை வட்டங்களில் பங்கேற்க தயாராக உள்ளது மற்றும் நமக்கு முன் வந்த முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் இது அடித்தளமாக அமைகிறது.
கச்சேரி தொடங்கும் முன், ஸ்ரேஷ்டா தனது குரு மற்றும் பெற்றோரிடம் ஆசி பெற்றார். இரண்டு மணி நேர இசைக் கச்சேரியில், ஸ்ரேஷ்டா தனது நிபுணத்துவம் மற்றும் கர்நாடக இசையின் நுணுக்கங்களில் தேர்ச்சி பெற்ற பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தார். திருவனந்தபுரம், கேரளாவைச் சேர்ந்த, தற்போது தில்லியில் குடியேறியுள்ள
நாகலட்சுமி சிவராமகிருஷ்ணன்- ஹரிஹரன் வெங்கிடசுப்ரமணியம் தம்பதியின் மகள் ஸ்ரேஷ்டா, தனது பெற்றோருக்கு ஒரு தனித்துவமான இசையமைப்பின் மூலம் அஞ்சலி செலுத்தினார். அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு பற்றியும் கொண்டாடினார். ஸ்ரேஷ்டா தற்போது, நொய்டா அமிதி பல்கலைக் கழகத்தில் உளவியலில் முதுகலைப் படிப்பு பயின்று வருகிறார்.
ஜி. ராகவேந்திர பிரசாத் வயலினும், மனோகர் பாலச்சந்திரன் மிருதங்கமும், வருண் ராஜசேகர் கடமும், ஷிவாங்கி தம்புராவும் வாசித்து கச்சேரியை மேலும் சிறப்பித்தனர். அனிஷ் பி.ராஜன் ( இயக்குநர், கலாசார அமைச்சகம்), தலைமை விருந்தினராகக் பங்கேற்றார். முனைவர் டி. வி. மணிகண்டன் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்