தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/நொய்டா கோவிலில் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி

நொய்டா கோவிலில் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி

நொய்டா கோவிலில் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி


செப் 25, 2026

Follow on GoogleFavourite on Google

செப் 25, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

நொய்டா கோவிலில் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி

பிரதோஷத்தை முன்னிட்டு, நொய்டா செக்டர் 62-ல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயர் ஆலயத்தில் சிறப்பு நடன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பத்மஸ்ரீ விருது பெற்றவரும், சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவருமான திருமதி கீதா சந்திரன் மாணவியான கே. ராதிகா சிறப்பான நடன நிகழ்ச்சி வழங்கினார்.

பிரதோஷத்தின் ஆன்மிகச் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில், நிகழ்ச்சியில் இடம் பெற்ற பெரும்பாலான பாடல்கள் சிவபெருமானை மையமாகக் கொண்டதாக அமைந்திருந்தன. பக்தியும் கலையும் இணைந்த நிகழ்ச்சி, திரளாகக் கூடியிருந்த பக்தர்களுக்கு சிறப்பான ஆன்மீக அனுபவத்தை அளித்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கே. ராதிகா உள்ளிட்ட கலைஞர்கள், வேதிக் பிரசார் சன்ஸ்தான் சார்பில் பிரேமா ராஜாவால் கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்ச்சியின் நிறைவாக, ஆலயத்திற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தி, இசை மற்றும் நடனம் இணைந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று, அனைவரின் பாராட்டையும் பெற்றது.

- நொய்டாவில் இருந்து வெங்கடேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us