/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதி கோவில் 37வது ஆண்டு மஹோத்ஸவம்
/
ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதி கோவில் 37வது ஆண்டு மஹோத்ஸவம்
ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதி கோவில் 37வது ஆண்டு மஹோத்ஸவம்
ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதி கோவில் 37வது ஆண்டு மஹோத்ஸவம்
ஜூலை 04, 2024

புதுதில்லி : லாரன்ஸ் ரோடில் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதி கோவிலில், 37வது ஆண்டு மஹோத்ஸவம் ஸ்ரீ கணபதி மற்றும் துவஜஸ்தம்ப பூஜையுடன் தொடங்கியது. உலக நன்மை வேண்டியும், அமைதியான, வளமான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலம் அனைவருக்கும் அமையவும், முக்கிய ஹோமங்கள் இதில் நடைபெற்றது.
இரண்டாம் நாளன்று, காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், நடைபெற்றது. இதையடுத்து, மஹன்யாஸ பாராயணம், ஏகாதச ருத்ர ஜபம், ஸிவாஷ்டோத்தர ஸத நாமாவளி, ஸ்ரீ ருத்ர நாம த்ரிஸதீ நாமார்ச்சனை, மிருத்யுஞ்சய மற்றும் ருத்ர ஹோமங்கள் நடைபெற்றன. வாத்தியார் சேனாதிபதி தலைமையில், ரித்விக்குகள் மற்றும் வேத விற்பன்னர்கள் திரளாக இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர். பூர்ணாஹூதியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
கோவிலில் அமைந்துள்ள சிவபரிவார், அனுமன், நவகிரஹ சன்னதிகள் கலச அபிஷேகம் செய்து சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக இதில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதி உற்சவ மூர்த்தியை மேளதாளங்கள் முழங்க ஏந்தியவாறு கோவில் காலனியை சுற்றி பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
- நமது செய்தியளர் எம்.வி.தியாகராஜன்