/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திரில் ஸ்ரீ ஜெயேந்திரர் 90 வது ஜெயந்தி
/
ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திரில் ஸ்ரீ ஜெயேந்திரர் 90 வது ஜெயந்தி
ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திரில் ஸ்ரீ ஜெயேந்திரர் 90 வது ஜெயந்தி
ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திரில் ஸ்ரீ ஜெயேந்திரர் 90 வது ஜெயந்தி
மார் 26, 2024

ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது சங்கராச்சாரியார் குரு மற்றும் பீடாதிபதி ஆவார். சுப்ரமணியம் மகாதேவ ஐயர், அவருக்கு முன்னோடியாக இருந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியால் (ஸ்ரீ மஹா பெரியவா) அவருக்குப் வாரிசாகப் பரிந்துரைக்கப்பட்டார். மேலும் அவருக்கு 22 மார்ச் 1954 அன்று ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.
புதுதில்லி அசப் அலி மார்க்கில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திரில் மார்ச் 22 முதல் 24ம் தேதி வரை, மூன்று நாட்கள் மஹா ருத்ர ஹோமம் மற்றும் வேத பாராயணம் நடைபெற்றது.
முதல் நாள், காஞ்சி சங்கர மடத்தின் 69வது பீடாதிபதியான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 90வது ஜெயந்தி உத்ஸவம் மிகவும் விமரிசையாக நடந்தது. காலை 7.30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவாசனம், கலச ஸ்தாபனம் நடைபெற்றது. 8.30 மணிக்கு மஹன்யாஸ பாராயண ஜபம், ஏகாதச ருத்ர ஜபம், ஸ்ரீருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை, ஸிவாஷ்டோத்தரஸத நாமாவளி மற்றும் கலச அபிஷேகம் நடைபெற்றது.
பிள்ளையார், அம்பாள் மற்றும் சிவன் திருவுருவங்கள் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மஹா பிரசாதம் வழங்கப்பட்டது. ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆன்மீக பங்களிப்பு குறித்து ஆலய நிர்வாகி பொள்ளாச்சி கணேசன் தன் நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
மாலை 4.00 மணிக்கு ஸ்ரீ ருத்ர சமக கிரமர்ச்சனி, ஸ்ரீ ருத்ர ஹோமம், பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
நிறைவு நாளன்று மஹன்யாஸ பாராயண ஜபத்துடன் தொடங்கி ஏகாதச ருத்ர ஜபம், ஸ்ரீருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை, மற்றும் கலச அபிஷேகம் நடைபெற்றது. ஐம்பதிற்கும் மேற்பட்ட ரிக் வேதிகள் தினமும் இதில் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திர் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்