/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
சாலிமார் பாக்கில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்

ஏப் 21, 2024

ஆண்டுக்கு ஒருமுறை பல்வேறு ஆலயங்களில் இறைவன் மற்றும் இறைவிக்கு திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமாகும். ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள இறை மூர்த்தத்துக்கு ஏற்ப திருக்கல்யாணம் நடத்தப்படும்.
புது தில்லி சாலிமார் பாக்கில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி திருக்கோயிலில் இன்று மாலை ஶ்ரீ மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் வேத மந்திரங்கள் முழங்க மிக கோலாகலமாக நடைபெற்றது. வண்ண மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோவில் மண்டபத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கல்யாண விருந்து நடைபெற்றது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்