மார் 30, 2026

ஸ்ரீ ராம நவமி கொண்டாட்டம்
புதுடில்லி ஹரி நகர் நாராயணி மந்திரில் மூன்று நாட்கள் (27-29 மார்ச்)கோலாகலமாக நடைபெற்ற ராம நவமி உற்சவம், அப்பகுதி பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.ஏற்பாடுகளை ஸ்ரீ ராம நவமி மஹோத்சவ சமிதி செய்திருந்தது.
முதல் நாள் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, பஜனை, வேத பாராயணம், சகஸ்ரநாம பாராயணம், சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. முக்கியமாக, சீதாராம கல்யாணம், வசந்த கேளிக்கை, ஆஞ்சநேய உற்சவம் ஆகியவை ஒரு பிரமாண்டமான தெய்வீக மற்றும் பக்தி மயமான கொண்டாட்டமாக அமைந்தன. இதில் பங்கேற்ற சென்னை ஏ.ஸ்ரீகாந்த் பாகவதர் குழுவினர் நிகழ்வை சிறப்பாக நடத்தி வைத்தனர்.
ராமநவமி என்பது விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராமரின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஒரு முக்கிய இந்து பண்டிகையாகும், இது ஒவ்வொரு ஆண்டும் சைத்ர மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் ஒன்பதாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், ராமர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பஜனைகள், ராமாயண பாராயணம் மற்றும் வீதி உலாக்கள் நடைபெறுகின்றன. பக்தர்கள் விரதமிருந்து ராமரின் நீதியையும் பக்தியையும் போற்றுகின்றனர்.
முன்னோர்கள் காட்டிய வழியில், பாரம்பரியம் மாறாமல் ராம நவமியைக் கொண்டாடுவது உங்கள் சந்ததியினருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஸ்ரீ ராமரின் அருளால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை, மன அமைதி மற்றும் செல்வம் பெருக ராம நவமி மஹோத்சவ சமிதியின் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றியில் பங்குவகித்த அனைவருக்கும் சமிதி தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்
