sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

நொய்டா கோவிலில் ஸ்ரீ ராம நவமி (நவாகம்) விழா

/

நொய்டா கோவிலில் ஸ்ரீ ராம நவமி (நவாகம்) விழா

நொய்டா கோவிலில் ஸ்ரீ ராம நவமி (நவாகம்) விழா

நொய்டா கோவிலில் ஸ்ரீ ராம நவமி (நவாகம்) விழா


ஏப் 24, 2024

ஏப் 24, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீராம நவமியை (நவாகம்), நொய்டாவின் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான், ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஒன்பது நாட்களும் நொய்டா, 62 ஆவது செக்டார் ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். ஸ்ரீ ராம நவமி நாளான 17ஆம் தேதி புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் அன்றைய நிகழ்ச்சி தொடங்கி, நவாக மூல பாராயணம் மற்றும் அபிஷேகத்திற்கு பிறகு ஸ்ரீ ராமர் பரிவாரத்தை சிறப்பாக அலங்கரித்தனர். உலக நன்மைக்காக நடந்த முதல் நாள் நிகழ்ச்சியான ராம லக்க்ஷார்ச்சனையில் பக்தர்கள் கலந்து கொண்டார்கள் .

இந்த ஆண்டு ஸ்ரீராம நவமி திருவிழாவின் முக்கிய அம்சம் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் மூல பாராயணம் (வால்மீகி ராமாயணம் முழுவதும் 9 நாட்கள் பாராயணம் - காலை (சமஸ்கிருதத்தில்), மற்றும் மாலையில் (தமிழில்), யக்ஞராம பாகவதர் (பரனூர் கிருஷ்ண பிரேமி சுவாமிகளின் முதன்மை சீடர்) வழங்கினார். மேலும் ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் சீதா கல்யாணம் கோவில் வளாகத்தில் நடந்தது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்துடன் தொடங்கிய நிகழ்ச்சி, 'உஞ்ச விருத்தி', பாரம்பரிய முறைப்படி நிகழ்ச்சி நடந்தது. அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த ஸ்ரீ ராம நவமி, வேதிக் பிரசார் சன்ஸ்தான் நடத்தப்படும், நான்காவது வருட விழாவாகும்.



பாகவதர் தினசரி உபன்யாசங்கள் வழங்குவது, மிகவும் சிறப்பான ஆன்மீக நிகழ்ச்சியாக இருந்தது. ஹரிப்ரியா யக்ஞராம தினமும் ராமாயணம் பாராயணம் படித்தார். இந்த சிறப்பு விழாவில், யக்ஞராம பாகவதர் அஷ்டபதி பஜனை, தரங்கம், மற்றும் பத்ரசலா ராமதாசர் கீர்த்தனைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், VPS நிர்வாகத்தினர் யக்ஞராம பாகவதர் மற்றும் குழுவினரை கவுரவித்தனர். கோவில் நிர்வாகமும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் உறுப்பினர்கள் பாலாஜி, ராஜு ஐயர், ராமசேஷன், விஸ்வநாதன், வெங்கடேஷ், ஸ்ரீதர் ஐயர், ராஜேந்திரன், மட்டுமல்லாமல், வெங்கட்ராமன், ஜி கிருஷ்ணன், அடுத்த தலைமுறையினர் அர்ஜுன் மற்றும் சிருஷ்டி ஆகியோரையும், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தின் மகளிர் பிரிவு, பல்வேறு ஸ்பான்சர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள், நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தியதற்காக பாராட்டியது. அனைத்து பூஜை ஏற்பாடுகளையும் கோவில் பண்டிதர்கள் மணிகண்டன் சர்மா மற்றும் மோஹித் மிஸ்ரா ஏற்பாடு செய்தனர். மகா தீபாராதனையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது, அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்த பக்தர்கள், அயோத்திக்குச் சென்ற உணர்வைப் பெற்றனர்.



ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் இருக்கும் ஸ்ரீ சாந்த ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டார். காலையில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் வடை மாலை சாத்தப்பட்டது. பக்தர்கள் ஹனுமான் சாலிசா படித்தனர்.

- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்








      Dinamalar
      Follow us