/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
நொய்டா கோவில்களில் ஸ்ரீ விநாயக சதுர்த்தி
/
நொய்டா கோவில்களில் ஸ்ரீ விநாயக சதுர்த்தி
செப் 08, 2024

ஸ்ரீ விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, நொய்டா, செக்டார் 62 ல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் கணபதி ஹோமம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விநாயகப் பெருமானுக்கு வெள்ளிக் கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. அனைத்து பூஜைகளும் ஹோமங்களும் ஸ்ரீராம் சாஸ்திரிகள், மற்றும் கோவில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா, மோஹித் மிஷ்ரா, வைபவ் மிஷ்ரா, ஜெகதீஸ் சிவாச்சாரியாரின் உதவியுடன், செய்யப்பட்டன. மஹாதீபாராதனையுடன் பக்தர்கள் அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
ஸ்ரீ விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, செக்டார் 62 கோவில் வளாகத்தில், பாகவதர்கள் ஓ.வி.ரமணி, சுனில் மற்றும் ராமகிருஷ்ணன் குழுவினரின் சிறப்பு சம்பிரதாய பஜனைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பஜனைகளை ஏராளமான பக்தர்கள் கேட்டு ரசித்தனர்.
செக்டர் 22
இதேபோன்ற பூஜைகள் நொய்டா, செக்டார் 22, ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில் வளாகத்திலும் நடைபெற்றன. காலையில் 'சாய்கிருபா' மாணவிகளால் மோதகம் வழங்கப்பட்டது. மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக, குரு மேரி இளங்கோவன் மற்றும் இளங்கோவன் கோவிந்தராஜன் ஆகியோரின் சீடர்களான த்வானி அருண் ஆகியோரின் பரதநாட்டிய நடன நிகழ்ச்சியை கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும், ஸ்கந்தன் சுரேஷ், புல்லாங்குழல் கச்சேரியும், விஎஸ்எஸ், நொய்டா மற்றும் பிற பக்தர்கள், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தனர். கணபதி ஊர்வலம், இரண்டு கோவில்களிலும் எடுத்துச் செல்லப்பட்டது.
கோவில் உறுப்பினர்கள் ரவி சர்மா, ஏ பாலாஜி, ஆர் ராமசேஷன், ராஜேந்திரன், வேதமூர்த்தி, ஸ்ரீதர் ஐயர், அழகப்பன், வெங்கட்ராமன், ஜானகி மற்றும் பலர் கலந்து கொண்டு, எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். இந்த இரண்டு கோயில்களும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான், நொய்டாவால் நிர்வகிக்கப்படுகிறது.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்