/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ஸ்ரீமத் ராமானுஜர் 1007-வது ஜெயந்தி
/
ஸ்ரீமத் ராமானுஜர் 1007-வது ஜெயந்தி

புது தில்லி : ஆர்.கே.புரம், செக்டார் 3ல் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா (பாலாஜி) கோவிலில் 12 மே 2024 அன்று, ஸ்ரீ ராமானுஜர் ஆச்சாரியாரின் 1007-வது ஜெயந்தி கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆச்சாரியார் ஜெயந்தி வருகிறது.
ஆதிசேஷன் அவதாரமென்று போற்றப்படும் ஸ்ரீராமானுஜர், வைணவத்தில் புரட்சிசெய்த அருளாளர். சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில், அசூரிகேசவ சோமயாஜி-காந்திமதி தம்பதிக்கு பிங்கள ஆண்டு (கி.பி 1017-ஆம் ஆண்டு) சித்திரை மாதம், வளர்பிறை, பஞ்சமி திதி, வியாழக்கிழமை, திருவாதிரைத் திருநாளில் அவதரித்த ராமானுஜர், தனது 120-ஆவது வயதில் திருநாடு (பரமபதம்) எழுந்தருளினார்.
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்
1007 முறை பாராயணம் செய்து லோக க்ஷேமத்திற்காக சங்கல்பம் எடுக்கப்பட்டது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தை நிகழ்நிலை மூலம், சுஜாதா வேணுகோபாலன் மேற்பார்வையில் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. கடந்த மூன்று வாரங்களாக ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பாராயணம் செய்தனர்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்