தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ நொய்டாவில் தியாகராஜ ஆராதனை

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை


ஜன 20, 2026

Follow on GoogleFavourite on Google

ஜன 20, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை
கௌதம் புத் நகர் தென்னிந்திய சங்கம், நொய்டா வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் உடன் இணைந்து சத்குரு தியாகராஜாவின் 179வது ஆராதனையை ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில், செக்டார் 22 நொய்டாவில் ஏற்பாடு செய்தனர். பூர்ணிமா ஷாயம் சுந்தர் தலைமையில், பஞ்சரத்ன கிருதிகள் பாடினார். பக்க வாத்தியத்தில் சுவாமிநாதன் (மிருதங்கம்), மற்றும் வயலினில் ராதிகா வெங்கடேஷ் வாசித்தனர். டாக்டர் சோமாஸ்கந்த சாஸ்திரி,ரவி பி சர்மா, தலைவர் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் மற்றும் கோண்ட்லி விளக்கேற்றினர். கீர்த்தனைகளை ரேணுகா தியாகரன், வைஷ்ணவி ஐயர் , ஜெயந்தி ஐயங்கார் மற்றும் சிந்துஜா ரவி ஆகியோர் பாடி அஞ்சலி செலுத்தினர். அனைவருக்கும் கிரி டிரேடிங் அச்சிட்ட பஞ்சரத்ன கீர்த்தனை புஸ்தகம் கொடுக்கப்பட்டது. மகா தீபாராதனையுடன் மஹா பிரசாதம் விநியோகப்பட்டது
கௌதம் புத் நகர் தென்னிந்திய சங்கத்திலிருந்து கே அருணாச்சலம்- தலைவர், ஏ.கே.ரஞ்சித் - துணைத் தலைவர்-II, குரு சுப்ரமணியன் - இணைச் செயலாளர்-II, எஸ். ஸ்ரீதர் ஐயர் - பொருளாளர் மற்றும் லதா சோமாஸ்கந்தன் - செயற்குழு உறுப்பினர் மற்றும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் தலைவர் ஸ்ரீ ரவி பி சர்மா, விஸ்வநாதன், ஜானகி, வி எஸ் எஸ் நோய்டாவின் சுரேஷ், மற்றும் ராமகிருஷ்ணாபுரம் சவுத் இந்தியன் சொசைட்டி செயலாளர் எஸ் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us