தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/வைதேகியின் பரத அரங்கேற்றம்

வைதேகியின் பரத அரங்கேற்றம்

வைதேகியின் பரத அரங்கேற்றம்


பிப் 02, 2026

Follow on GoogleFavourite on Google

பிப் 02, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

டில்லி லோதி ரோடு இந்திய பன்னாட்டு மையம் தேஷ்முக் வளாகத்தில் வைதேகி அகர்வாலின் பரத அரங்கேற்றம் ஞாயிறு (1/2/26)நடைபெற்றது.கலாஸ்ரீ ருசி குப்தாவின் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.அன்றைய தினம் நட்டு வாங்கம் குரு ருசி குப்தா, வாய்ப்பாட்டு டில்லி சுதா ரகுராமன், மிருதங்கம் கேசவன் ராமமூர்த்தி ,வயலின் உமா அருண் வாசித்தனர்.
முக்கிய விருந்தினராக பிரதீபா பிரகலாத், ஹன்ஸ் மல்கோத்ரா ( நெடுஞ்சாலை துறை இணை அமைச்சர்)டாக்டர் வட்ஸ், வினீத் வட்ஸ்கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
புஷ்பாஞ்சலியை வாசஸ்பதியில் தொடங்கி கணேச வந்தனம் , அலாரிப்பு ( நாட்டை) ஜதீஸ்வரம் (ஆரபிமில்) அடுத்தடுத்து நடனமாடி அவையோரை மகிழ்வித்தார். கமாஸ் வர்ணம் 'சுவாமியை அழைத்து வாடி ' பாவபூர்வமாகவும் கலைநயத்தோடும் இருந்தது. குருவின் ஜதிகள் விறுவிறுப்பான நடனத்தை காண வைத்தது. நாட்டிய தெய்வம் சிவனை வர்ணிக்க சங்கர் ஸ்ரீ கிரி நாதப்பிரபோவில் நடனமுத்திரைகளை வைதேகி அனாயசமாக கையாண்டார். சிந்து பைரவியில் அமைந்த மீரா பஜன் அவையோரை கவர்ந்தது. ஸ்வாதி திருநாளின் தில்லானா மோகன கல்யாணியில் விறுவிறுப்பான நடனத்தை அரங்கம் அதிர கைதட்டல் களை பெற்றது. மங்களத்துடன் அரங்கேற்ற நிகழ்வு நிறைவுற்றது.விஷாஷ் திவான் அருமையாக தொகுத்து வழங்கினார்
- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் மீனா வெங்கி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us