தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/டில்லியில் வள்ளலார் தின விழா

டில்லியில் வள்ளலார் தின விழா

டில்லியில் வள்ளலார் தின விழா


அக் 05, 2026

Follow on GoogleFavourite on Google

அக் 05, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

வள்ளலார் தின விழா
டில்லித் தமிழ்ச் சங்கத்தில் அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் நினைவு வள்ளலார் அறக்கட்டளை சார்பில் வள்ளலார் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் வள்ளலாரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
சங்கத்தின் பொதுச் செயலாளர் சத்யா அசோகன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் முனைவர் ஜி.சிவபாலமுருகன் தலைமையுரை ஆற்றினர்.
பின்னர் “வள்ளலார் ஓர் உலக ஞானி” என்ற தலைப்பில் அருட்பா இசையுடன் இணைந்த அருள் உரை நடைபெற்றது. இசைமாமணி இளங்கோவன் கோவிந்தராஜன் குரலிசை வழங்க முத்தமிழ்ச் செல்வர் தங்க. காமராஜ் உரையாற்றினார்.
பக்கவாத்தியங்களாக ரகுராமன் கோவிந்தராஜன் புல்லாங்குழலும், வி.எஸ்.கே. அண்ணாதுரை வயலினும், தாளமணி பி. வெற்றிபூபதி மிருதங்கமும், எம். ஸ்ரீராம் கடமும் வாசித்தனர்.
கலைஞர்களை சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் முனைவர் ஜி. சிவபாலமுருகன், துணைத் தலைவர் செல்வராஜ் மகேந்திரன், பொதுச் செயலாளர் சத்யா அசோகன், இணைச் செயலாளர்கள் ரா.ராஜ்குமார் பாலா, ஜோதி பெருமாள், பொருளாளர் பாலமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் ஜோதி ராமநாதன், ஆ. வெங்கடேசன், ரேவதி ராஜன், வே.இளஞ்சோழன், ஆர். கணேஷ், கே. சுந்தர் மற்றும் காத்திருப்பு உறுப்பினர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கௌரவித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் பொருளாளர் பாலமூர்த்தி நன்றியுரை கூறினார். செயற்குழு உறுப்பினர் ஜோதி ராமநாதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் டில்லி வாழ் தமிழ் ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- முனைவர் ஜி. சிவபாலமுருகன்தலைவர்+91 98111 18827
சத்யா அசோகன்பொதுச் செயலாளர்+91 98115 18596

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us