தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/தில்லியில் வள்ளி கல்யாணம்

தில்லியில் வள்ளி கல்யாணம்

தில்லியில் வள்ளி கல்யாணம்


ஏப் 05, 2026

Follow on GoogleFavourite on Google

ஏப் 05, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

மயூர்விகார் காருண்ய மகா கணபதி கோவிலில் முருகன் வள்ளி கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது பெங்களூர் சென்னை நகரங்களில் இருந்து சுமார் 20 திருப்புகழ் மகளிர் அன்பர்கள் வந்திருந்து பாடல்களால் வள்ளி கல்யாணத்தை நடத்தி வைத்தனர். முன்னதாக சுமார் இரண்டு மாதம் ஆன்லைனில் குரு பத்மா மாமியும் அவரது மூத்த சகோதரி பாமா அவர்கள் தில்லியில் இருந்தும் பாடல்களை சொல்லிக்கொடுத்து தில்லி குழுவை தயார்செய்திருந்தனர்.


பங்குனிஉத்தரம் ஒட்டி வந்த படியால் முருக பக்தர்கள் பெருமளவில் உற்சாகமாக கலந்து கொண்டனர். கோவில் நிர்வாகம் வந்திருந்த குழு தங்க ஏற்பாடு செய்ததுடன் கல்யாணம் வைபவத்தை மிகச்சிறப்பாக நடத்தினார்கள்.காலம் சென்ற கல்யாணி மாமி என்பவர் இந்த பாடல் தொகுப்பைஎழுதி மெட்டமைத்துள்ளார்.இடையேதிருப்புகழ் பாடல்களும் பாடப்பட்டன. சீர்வரிசைகள பெண்கள் எடுத்து வந்த அழகு.. முருகன் ஜனனம், வேல் வாங்குதல், சூரபத்ம வதம், வள்ளி சந்திப்பு, வள்ளி தேவசேனாவை சபைக்கு ஆடி ஆடி அழைத்து வந்தது.முருகன்மகிழ்ந்து சபை வந்தது, திருமாங்கல்ய வைபவம் , காவடி ஆட்டம் என் பக்தர்கள் கலந்து கொண்டு தம் வீட்டில் நடக்கும் வைபவமாக பாவித்து மகிழ்ந்தனர்.


கோவில் சார்பில் வந்திருந்த வெளியூர் அன்பர்கள் கெளரவிக்கப்பட்டனர். கல்யாணம் கண்டு விருந்து உண்டு மகிழ்ந்து சென்றனர்


- தில்லியில் இருந்து நமது செய்தியாளர் மீனா வெங்கி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us