/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

ஆக 27, 2025

ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரின் ஆசீர்வாதத்துடன், புதுடில்லி, ஆர். கே. புரம், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில், விநாயகர் சதுர்த்தி மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ கணபதிக்கு கலச பூஜை, கணபதி ஹோமம், மகாபிஷேகம், அர்ச்சனை மற்றும் நெய்வேத்தியம் செய்யப்பட்டது. தொடர்ந்து, தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகப்பட்டது.
கணபதிக்கு சுரேஷ் மற்றும் கீதா குடும்பத்தினர் வெள்ளி கிரீடம், நெற்றியில் வெள்ளி விபூதி கோடுகள் மற்றும் வெள்ளி பூணூல் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தினர். இந்தக் குடும்பத்தின் நீண்டகால ஆசையான இது போன்ற காணிக்கைகள் விநாயகர் சதுர்த்தி நாளில் நிறைவேறியது குறித்து மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்