/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
100 மொழிகளில் பகவத் கீதையை பாடல் வடிவில் வெளியிடும் பணி
/
100 மொழிகளில் பகவத் கீதையை பாடல் வடிவில் வெளியிடும் பணி
100 மொழிகளில் பகவத் கீதையை பாடல் வடிவில் வெளியிடும் பணி
100 மொழிகளில் பகவத் கீதையை பாடல் வடிவில் வெளியிடும் பணி
அக் 21, 2025

உலகளவில் தமிழ் உட்பட 100 மொழிகளில் பகவத் கீதையை பாடி விளக்குவதற்கான பணியில் முனைவர் கஜல் ஸ்ரீனிவாஸுடன் இணைந்து ஹைதராபாத் யேசுதாஸ் என அழைக்கப் படும் பாடகர் ரவிசங்கர் பணியாற்றுகிறார். அதறகாக அவர், சாரதா பீட ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் அவரது சீடர் சாத்மானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரின் முன்னிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால் கௌரவிக்கப்பட்டார். பகவத் கீதையின் தமிழ் பதிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இந்த நிகழ்வு, பகவத் கீதையின் ஆன்மீக சாரத்தை தமிழில் மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வதிலும், அதன் ஞானத்தை பரப்ப உதவியதிலும் ரவிசங்கரின் பங்களிப்பை அங்கீகரித்து பாராட்டியது. ஹைதராபாத் சந்தாநகரில் உள்ள காஞ்சி காமகோடி மடத்தை சேர்ந்த வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில், பண்டிதர்களால் வேத முழக்கங்கள் ஒலிக்க சுமார் 4 மணி நேரம் விழா நடைபெற்றது.