தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/ஆபிரகாம் பண்டிதர் பிறந்தநாள் விழாக் கருத்தரங்கம்

ஆபிரகாம் பண்டிதர் பிறந்தநாள் விழாக் கருத்தரங்கம்

ஆபிரகாம் பண்டிதர் பிறந்தநாள் விழாக் கருத்தரங்கம்


ஆக 27, 2026

Follow on GoogleFavourite on Google

ஆக 27, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் ஆபிரகாம் பண்டிதர் பிறந்தநாள் விழாக் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வுத் தலைவர் பாவரசு முகவை திருநாதன் மன்றத்தின் சிறப்பையும் இசைத்தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதரது கலைத்தமிழ்ப் பணிகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.


கருத்தரங்கத் தலைவர் முதுமுனைவர் பா.செந்தில் முருகன் கருத்தரங்கத்தை நடத்திக் கொடுத்தார். உரையாளர்கள் அறுவரும் ஆபிரகாம் பண்டிதர் அவர்களைப் பற்றிய அறுவேறு தலைப்புகளைச் சிறப்பாக ஆய்வு செய்து பேசினர். வரவேற்புரை - கவித்திலகம் ஜி.வி.பரமசிவமும் நன்றியுரை கு.மாரியப்பனும் வழங்கினார். நெறியாள்கையை நற்றமிழ் நாவலர் செ்ல்வி ராஜ் செய்திருந்தார். பல்வேறு தமிழமைப்பைச் சார்ந்தோரும் நிகழ்வில் கலந்து மகிழ்ந்தனர்.

கருத்தரங்கத் தலைவர்: முதுமுனைவர் செந்தில் முருகன், இயக்குநர்- மாமல்லன் ஐ.ஏ.எஸ்.அகடெமி, சென்னை. கருத்துரைஞர் - தமிழ் எழுத்தாளர் மன்றம்


1)தமிழின் தொன்மை: முனைவர் கு.நாகம்மாள், கருத்துரைஞர், தமிழ் எழுத்தாளர் மன்றம், பேராசிரியர்-வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை


2)தமிழில் பிற மொழிகள் கலப்பு: நற்றமிழ் நாவலர் செல்வி ராஜ், கருத்துரைஞர் தமிழ் எழுத்தாளர் மன்றம், மேனாள் செயலாளர், கார்கர் தமிழ்ச்சங்கம்

3)கால்டுவெல் ஆராய்ச்சிக் குறிப்புகள்: கவியருவி அ.சமாரியா -கலைப்பிரிவு, தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்துநர்- தித்திக்கும் செந்தேன் திரையிசை கீதங்கள் இசைக்குழு


4)அயல் மொழிகளில் தமிழ்: முனைவர் கி. துர்காதேவி, கருத்துரைஞர் - தமிழ் எழுத்தாளர் மன்றம், பேராசிரியர், வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை


5)அனைத்து மொழிகளுக்கும் தமிழே தாய்: முனைவர் சு.பாஸ்கர், கருத்துரைஞர்- தமிழ் எழுத்தாளர் மன்றம், பேராசிரியர் - தமிழ்த்துறை தஞ்சாவூர்


6)தமிழ்ச் சங்கங்களும் இசையும்: வழக்கறிஞர் சாக்ரடீசு கணேசன், சட்ட ஆலோசகர்- தமிழ் எழுத்தாளர் மன்றம் தத்துவவியலாளர், மும்பை

ஆபிரகாம் பண்டிதர் வெறுமெனே தமிழ்ப்பணி மட்டுமல்ல. கலைப்பணி, விவசாயப்பணி, மருத்துவப்பணி, இலக்கியப்பணி என்று பன்முக ஆளுமையாக வாழ்ந்து மறைந்துள்ளார் என்பதனை அனைத்து உரையாளர்களும் உரைத்தனர்.


- நமது வாசகர் நாவரசு வதிலை பிரதாபன் அறங்காவலர் குழுத் தலைவர், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us