ஜூலை 18, 2026

நாசிக் தமிழ் சங்க கல்விப்பணி
கர்மவீரர் காமராஜ் பிறந்த நாளை முன்னிட்டு நாசிக் தமிழ்ச் சங்கம் சார்பில் கங்கா முல்லுங்கில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் தமிழ்ச் சங்கம் நாசிக்கின் தலைவர் திரி ராமமூர்த்தி தலைமையில் வழங்கப்பட்டது.மாணவர்கள் நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பெற்றுக் கொண்டனர் .
கடந்த ஐந்து வருடங்களாக நாசிக் தமிழ் சங்கம் இந்த கல்விப் பணியை செய்து வருகின்றது. மேலும் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளின் உடல்நலன் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டமாக அவர்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு வாட்டர் கூலர் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவினை சங்க செயற்குழு உறுப்பினர்கள் மிகுந்த சிரத்தையுடன் நடத்திக் கொடுத்தனர்.நோட்டு புத்தகங்கள் மற்றும் பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ், கலர் கிரையான்ஸ் பெற்றுக்கொண்ட மாணவர்களின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சியை அவர்களின் இளம் புன் சிரிப்பின் மூலம் உணர முடிந்தது. பள்ளி ஆசிரியர்களும் நிர்வாக த்தினரும் தமிழ் சங்கம் நன்றியுடன் கடமைப்பட்டுள்ளதாக உணர்ச்சி பொங்க கூறியது பெருமைக்குரிய விஷயம்.
இவ்விழாவில் விழா மேடையில் மராட்டிய வாசகங்களுடன்' நன்றி' என்ற தமிழ் வார்த்தை இடம்பெற்றது சிறப்புக்குரிய அம்சம்.
