/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
நாசிக் தமிழ் சங்கத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்
/
நாசிக் தமிழ் சங்கத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஜன 01, 2025

நாசிக் தமிழ் மக்களுக்கு நாசிக் தமிழ் சங்க தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இனிய 2025ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியாக இந்த வருடம் அமையும் என வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஜனவரி மாதம் 19ஆம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் விழாவினை சிறப்பான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். நாசிக் மக்கள் தாங்களாகவே முன் வந்து கலைநிகழ்ச்சிகள் நடத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் முடிவெடுத்துள்ளனர்.
தமிழ் மக்களுக்கும் அல்லாது அனைவருக்குமான நல் செயல்களை திறம்பட நடத்தி வருவது நிதர்சனமான உண்மை. உலக தமிழர்கள் மத்தியில் தமிழ் சங்கம் நாசிக் ஓர் உன்னதமான இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
தினமலர் சார்பில் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகள்.
- நமது செய்தியாளர் பா. ஸ்ரீதர்