/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
தெலுங்கானா தமிழ்ச் சங்கம் நடத்திய புறமனை விருந்து - வானபோஜனம் 2025
/
தெலுங்கானா தமிழ்ச் சங்கம் நடத்திய புறமனை விருந்து - வானபோஜனம் 2025
தெலுங்கானா தமிழ்ச் சங்கம் நடத்திய புறமனை விருந்து - வானபோஜனம் 2025
தெலுங்கானா தமிழ்ச் சங்கம் நடத்திய புறமனை விருந்து - வானபோஜனம் 2025
நவ 24, 2025

தெலுங்கானா மாநிலத்தில் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் முக்கியமான அமைப்பான தெலுங்கானா தமிழ்ச் சங்கம், தனது வருடாந்திர பாரம்பரிய நிகழ்வான “புறமனை விருந்து - வானபோஜனம் 2025” நிகழ்ச்சியை ஐதராபாத் நகரின் பிரபலமான சஞ்சீவையா பூங்காவில் சிறப்பாக நடத்தியது.
நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி, தமிழர்களின் பாரம்பரியத்தை, உணவு மரபை, கலாச்சார ஒற்றுமையை இயற்கையோடு இணைந்து கொண்டாடும் தனித்துவமான ஒன்றாக அமைந்தது. கார்த்திகை மாத வனபோஜனத்தின் பாரம்பரியத்தை தமிழர்களிடமும் செம்மைப்படுத்தும் வகையில் சங்கம் வருடந்தோறும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்
தமிழ்த்தாய்வாழ்த்து, மங்கள விளக்கு ஏற்றல் மூலம் நிகழ்ச்சி சிறப்பான முறையில் தொடங்கப்பட்டது. குழந்தைகள் முதல் மூத்தவர்கள்வரை அனைவரையும் இணைக்கும் அறிமுகம் மற்றும் சமூக தொடர்பு அமர்வுகள். குடும்ப விளையாட்டுகள், கலாச்சார சிறுபாடல்கள், தமிழ் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் செயல்பாடுகள். பங்கேற்பாளர்களுடன் எடுக்கப்பட்ட மிகப்பெரிய குழு புகைப்படம் நிகழ்ச்சியின் ஒற்றுமையை வெளிப்படுத்தியது. மொத்தம் 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய தமிழ் உணவுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு பொருட்கள், புத்தகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பாரம்பரிய பொருட்கள் ஆகியவை அமைக்கப்பட்ட சிறப்பு அங்காடிகளில் சிறப்பாக விற்பனையாகின.
தலைவர் எம். கே. போஸ் தெரிவித்ததாவது: “புறமனை விருந்து என்பது நம் பண்பாட்டின் உயிர்நாடி. குடும்பங்கள் இயற்கையோடு இணைந்து கலந்துரையாடும் இந்நிகழ்ச்சி, தமிழர்களின் ஒன்றிணைவு மற்றும் பண்பாட்டு பெருமையை வலுப்படுத்துகிறது.” பொதுச் செயலாளர் ராஜ்குமார் சிவாஜி கூறியதாவது: “இந்த ஆண்டின் வானபோஜனம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஒன்று கூடி கொண்டாடிய இந்த நிகழ்ச்சி, தமிழர்களின் அன்பும் ஒற்றுமையும் எவ்வளவு வலிமையானது என்பதை மீண்டும் நிரூபித்தது. நிகழ்ச்சியை வெற்றிகரமாக்க உதவிய தன்னார்வலர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி.”
தமிழ்ச் சங்கத்தின் பண்பாட்டு பணி
தெலுங்கானா மாநிலத்தில் தமிழர்களின் மொழி, பாரம்பரியம், கல்வி, கலை, சமூக நலன் ஆகிய துறைகளில் பல்வேறு திட்டங்களை தெலுங்கானா தமிழ்ச் சங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. தமிழர்களின் குரல் மற்றும் பண்பாட்டு அடையாளத்தை வலுப்படுத்தும் செயல்பாடுகளுக்கு சங்கம் ஆண்டுதோறும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
