sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/நாசிக்கில் தமிழ்ப் பயிற்சி வகுப்பு

நாசிக்கில் தமிழ்ப் பயிற்சி வகுப்பு

நாசிக்கில் தமிழ்ப் பயிற்சி வகுப்பு


மார் 03, 2026

Favourite on Google

மார் 03, 2026


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாசிக்கில் தமிழ்ப் பயிற்சி வகுப்பு
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் நாசிக் தமிழ் சங்கம், கடந்த மாதம் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழ் மக்கள் குழந்தைகளுக்கு தமிழை கற்பிப்பதற்காக தமிழ் வகுப்புகள் நடத்த திட்டமிட்ட பின்,
'செம்மொழி தமிழ் எம்மொழி தமிழ் 'என்ற பெயரால் மூன்று வாரங்களாக தமிழ் கற்றல் வகுப்புகள் ஒவ்வொரு வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் நாசிக் கேம்பிரிட்ஜ் பள்ளியில் நடைபெறுகிறது. முதல் வாரம் 20 ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் .இரண்டாம் வாரம் 30 பேர் கலந்து கொண்டனர். மூன்றாவது வாரம் 40 பேர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு வாரமும் எண்ணிக்கை அதிகரித்து வருவது தமிழ் கற்பதன் மீது உள்ள ஆர்வத்தை வெளிக்காட்டுகின்றது. தமிழ் மக்கள் மட்டுமல்லாது மராட்டிய குழந்தைகளும் இந்த வகுப்பில் கலந்து கொண்டு தமிழை கற்றுக் கொள்வது சிறப்பான அம்சம். இப்பணி சிறப்பாய் தொடர்ந்திட தமிழை கற்றுக்கொள்ளும் ஆர்வலர்களுக்கும், கற்பித்துக் கொண்டிருக்கும் ஆசான்களுக்கும், நாசிக் கேம்பிரிட்ஜ் பள்ளி நிர்வாகத்தினருக்கும், நாசிக் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கும், தினமலர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றது
மேலும் இந்த கல்விப் பணி செழுமையாக தமிழை வளர்த்திட தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரகம் மூலமாக தமிழ் பயிற்சி நூல்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்க ஆவண செய்யப்படுகின்றது .
- நாசிக்கில் இருந்து தினமலர் செய்தியாளர் பா.ஸ்ரீதர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us