தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/ஆசிரியர் நாள் கருத்தரங்கம்

ஆசிரியர் நாள் கருத்தரங்கம்

ஆசிரியர் நாள் கருத்தரங்கம்


செப் 16, 2026

Follow on GoogleFavourite on Google

செப் 16, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் 118 ஆம் தொடர் நிகழ்வான ஆசிரியர் நாள் கருத்தரங்கம் வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் கு.நாகம்மாள் தலைமையில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.


தஞ்சை பாரத் கல்லூரிப் பேராசிரியர் வீ.சு.ரா. செம்பியன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் 'பொறுமைத்திறன்' என்ற தலைப்பில் தமிழ் எழுத்தாளர் மன்றக் கலைப்பிரிவுத் துணை ஒருங்கிணைப்பாளர் வாணிசிறி வேணுகோபால், 'நிறுவனத் திறன்' என்ற தலைப்பில் சென்னை எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் நிறுவன முனைவர் வெ.நளினி. 'நினைவாற்றல் திறன் என்ற தலைப்பில் சென்னை சவீதா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் V.நளினி, தலைமைத்துவத் திறன் என்ற தலைப்பில் தமிழ் எழுத்தாளர் மன்ற நிருவாகக்குழுச் செயலாளர் டாக்டர் ஜிவி பரமசிவம் வாசுதேவன், 'ஆக்கபூர்வமான சிந்தனைத் திறன்' என்ற தலைப்பில் மலேசியா சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ஆசைக்கண்ணு, மோதல் தீர்க்கும் திறன் என்ற தலைப்பில் சென்னைஇந்துஸ்தான் சர்வதேசப் பள்ளி தமிழ் ஆசிரியர் முனைவர் அ.லலிதா ஆகியோர் ஆசிரியர்களின் சிறப்புகளை தனித்தனித் தலைப்புகளில் அருமையாக உரையாற்றிச் சிறப்பித்தனர்.


மன்றக் கருத்துரைஞர் முனைவர் கி.துர்காதேவி வரவேற்புரை வழங்க, மன்றக் கலைப்பிரிவுத் துணை அமைப்பாளர் வாணிசிறி வேணுகோபால் நெறியாள்கை செய்து கருத்துரை வழங்கினார். மன்ற ஆலோசகர்கள் முகவை திருநாதன் மற்றும் வழக்கறிஞர் சாக்ரடீசு கணேசன் நகழ்வுகளைப் பாராட்டினர்..


- நமது வாசகர் வதிலை பிரதாபன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us