திமுக அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்?: அன்புமணி ஆவேசம்
திமுக அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்?: அன்புமணி ஆவேசம்
ADDED : ஜன 02, 2024 03:36 PM

சிதம்பரம்: திமுக அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்? என பா.ம.க தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
பா.ம.க சார்பில், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம் சிதம்பரத்தில் இன்று(ஜன.,02) நடந்தது. இதில் பா.ம.க தலைவர் அன்புமணி கலந்து கொண்டு பேசியதாவது: 2,000 ஆண்டுகளாக, ஜாதியை வைத்துதான் அடக்குமுறை செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். ஜாதி பார்த்து அமைச்சர் பதவி கொடுக்கும் திமுக அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மட்டும் ஏன் மறுக்கிறார்கள்?. இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் மீது அக்கறை உள்ளதா?
இதற்கிடையே எக்ஸ் சமூகவலைதளத்தில் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் தமிழ் மன்றங்களை மேம்படுத்த ஆண்டுக்கு ரூ.5.60 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது வரவேற்கத்தக்கது.
தமிழ் மீது அக்கறை இருந்தால் தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க மறுப்பது ஏன்?. அரசுக்கு தமிழ் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளதா?. தமிழ்வழி கல்வியை கட்டாயமாக்க புதிய சட்டம் தேவைப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி தெரிவித்துள்ளார்.