/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
216 மணி நேரம் பரதநாட்டியம் சாதனை முயற்சியில் தீக் ஷா
/
216 மணி நேரம் பரதநாட்டியம் சாதனை முயற்சியில் தீக் ஷா
216 மணி நேரம் பரதநாட்டியம் சாதனை முயற்சியில் தீக் ஷா
216 மணி நேரம் பரதநாட்டியம் சாதனை முயற்சியில் தீக் ஷா
ADDED : ஆக 24, 2025 11:17 PM

இவர் படிக்கும் போதே, பரதநாட்டியத்தில் ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என நினைத்தார். இதற்காக, கடுமையான பயிற்சிகள் பெற்று வந்தார். இவர் பரதநாட்டியத்திற்காக பல மேடைகளில் ஏறி, தன் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இதற்காக, பள்ளி, கல்லுாரி, ஊர் திருவிழா, கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இவர் பரதத்தில் பரவேஷா, பாரம்பிகா, பர்வேஷிகா ஆகிய தேர்வுகளில் பங்கேற்று, தேர்ச்சி பெற்றார். தற்போது, வித்வாத் எனும் தேர்வுக்கு தயாராகி வருகிறார். இதற்கிடையில் தன் நீண்ட நாள் கனவான, புதிய சாதனையை படைக்க நினைத்தார்.
அதனால், தொடர்ந்து ஒன்பது நாட்கள், 71 மணி நேரம் தொடர்ச்சியாக பரதநாட்டியம் ஆடி சாதனை புரிய நினைத்தார். இந்த ஆச்சரியத்தை நிகழ்த்தி காட்ட, புயலாக புறப்பட்டார் தீக் ஷா.
நடன மாரத்தான் நடன மாரத்தான் எனும் பெயரில், அஜ்ஜர்கட்டில் உள்ள டாக்டர் ஜி.சங்கர் மகளிர் கல்லுாரியில் உள்ள மண்டபத்தில் தன் சாதனை பயனத்தை, கடந்த 21ம் தேதி துவங்கினார். இது வரும் 30ம் தேதி முடிவடையும். இந்நிகழ்ச்சியை உடுப்பி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ரகுபதி பட் துவக்கி வைத்து, ஆசி வழங்கினார். இந்த கட்டுரையை நீங்கள் வாசித்து கொண்டிருக்கும் போதும், அவர் ஆடி கொண்டி இருப்பார் என்பதை யாரும் மறக்க வேண்டாம். இந்த சாதனையை அவர் செய்து முடித்தால், கோல்டன் புக் ஆப் வோர்ல்டு ரிக்கார்டில் இடம் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
விதிமுறைகள்: 216 மணி நேரம் தொடர்ச்சியாக நடனம் ஆடுவார். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்து நிமிடங்கள் ஓய்வு தரப்படும். அதுபோல, ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் ஓய்வு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனை முயற்சி குறித்து தீக் ஷா கூறியதாவது:
ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக பரதம் ஆடுவதாக முடிவு எடுத்தேன். இதற்கு காரணம், ஒன்பது என்பது தெய்வீக எண்.
அர்ப்பணிப்பு நான் எப்போதும், பரதநாட்டியத்தில் ஏதாவது ஒரு சாதனை புரிந்து, அதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என நினைப்பேன். நான் மற்ற மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன்.
இந்த சாதனையை செய்து முடித்தால், அவர்களுக்கும் பரதத்தில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் கிடைக்கும். இந்த கல்லுாரியில் தான் படித்தேன்; கல்லுாரி நிர்வாகம் என்னிடம் கட்டணம் வசூலிக்கவில்லை. அதனால், இந்த கல்லுாரி வளாகத்திலே சாதனையை நடத்த முயற்சித்தேன். இது என் கல்லுாரிக்கு செய்யும் அர்ப்பணிப்பு ஆகும். இந்த சாதனையை சிறப்பாக செய்து முடிப்பேன் என நம்பிக்கை உள்ளது. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.