sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

ஆடவள் அரங்கம்

/

தந்தையின் நிலக்கடலை ஆசை மகளை தொழிலதிபராக்கிறது

/

தந்தையின் நிலக்கடலை ஆசை மகளை தொழிலதிபராக்கிறது

தந்தையின் நிலக்கடலை ஆசை மகளை தொழிலதிபராக்கிறது

தந்தையின் நிலக்கடலை ஆசை மகளை தொழிலதிபராக்கிறது


ADDED : ஆக 04, 2025 05:27 AM

Google News

ADDED : ஆக 04, 2025 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தன் தந்தையின் நிலக்கடலை சாப்பிடும் ஆசையை தீர்த்து வைக்க விரும்பிய மகள், இன்று தொழிலதிபராக வளர்ந்துள்ளார். இவரது வாழ்க்கை பல பெண்களுக்கு வழி காட்டியாக அமைந்துள்ளது.

வாழ்க்கையே விசித்ரமானது. எப்போது எப்படி, புரட்டிப்போடும் என்பதை கூற முடியாது. சிறு விஷயமும் பெரிய சாதனைக்கு வழி வகுக்கும். அதே போன்று தந்தையின் நிலக்கடலை ஆசை, மகளை தொழிலதிபராக்கியது.

பெங்களூரின், ராகிகுட்டாவில் வசிப்பவர் கிருஷ்ண மூர்த்தி. இவர் எலக்ட்ரீஷியனாக பணியாற்றுகிறார். இவருக்கு நிலக்கடலை என்றால் மிகவும் விருப்பம். தினமும் வீட்டில் என்ன சமைத்தாலும், அதில் நிலக்கடலை இருக்க வேண்டும் என, பிடிவாதம் பிடிப்பார். ஒரு முறை இவரது நண்பர் ஒருவர் பாங்காக் சென்றிருந்தார். நண்பரின் நிலக்கடலை விருப்பத்தை அறிந்த அவர், அங்கிருந்து வரும் போது, கிருஷ்ணமூர்த்திக்காக தேங்காய் பால் நிலக்கடலையை வாங்கி வந்தார்.

தேங்காய் பாலில் தோய்த்தெடுத்து, வறுத்த நிலக்கடலை மிகவும் சுவையாக இருந்தது. இது கிருஷ்ணமூர்த்திக்கு மிகவும் பிடித்தது. இன்னும் சாப்பிட வேண்டும் என, விரும்பினார். தன் தந்தையின் ஆசையை கண்ட அவரது, 19 வயது மகள் யோகிதா, பாங்காக் நிலக்கடலை பாக்கெட் மீது எழுதியிருந்த செய்முறை விபரங்களை பார்த்து, அதே போன்று தேங்காய் பால் நிலக்கடலை தயாரித்து, தந்தைக்கு கொடுத்தார். அவர் குஷி அடைந்தார்.

அதனை அக்கம், பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர். அனைவருக்கும் பிடித்துவிட்டது. யோகிதாவை புகழ்ந்தனர். 'சூப்பர்நட்ஸ்' என பெயர் வைத்தனர். தேங்காய் பால் நிலக்கடலையின் சுவைக்கு மயங்கிய பலரும் பணம் கொடுக்கிறோம். எங்களுக்கு தேங்காய் பால் நிலக்கடலை செய்து தரும்படி யோகிதாவிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவரும் செய்து கொடுத்தார். இது ஒருவரிடம் இருந்து, மற்றவருக்கு பரவி, 2001ல் வியாபாரமாக மாறியது.

சின்னத்திரை நடிகையான பத்மகலா, யோகிதாவின் தாயாரின் தோழியாவார். இவரது முயற்சியால், ராகிகுட்டா கோவிலில் நடந்த ஹனும ஜெயந்தி பொருட்காட்சியில், யோகிதாவின் உற்பத்தியை வைக்க கடை கிடைத்தது. கடையில் தேங்காய் பால் நிலக்கடலை அமோகமாக விற்பனையானது. கல்லுாரி மாணவியாக இருந்த போது, யோகிதா சிறிய அளவில் துவங்கிய தொழில், இன்று பெரிய அளவில் வளர்ந்துள்ளது. 'சித்தி விநாயகா புட்' என்ற நிறுவனம் துவங்கி, வெற்றிகரமாக நடத்துகிறார். இவருக்கு கணவர் ரகுநாத்தும் உதவியாக இருக்கிறார்.

இவர்களின் நிறுவனத்தில், தேங்காய் பால் நிலக்கடலை மட்டுமின்றி, ஒன்பது விதமான நிலக்கடலை தின்பண்டங்கள் 'சூப்பர் நட்ஸ்'என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறது. சமீபத்தில் சிறுதானியங்கள் பூசப்பட்ட நிலக்கடலையை மார்க்கெட்டில் அறிமுகம் செய்தார்.

கடந்த 2001ல் வீட்டிலேயே, சிறிய அளவில் தேங்காய் பால் வேர்க்கடலை தயாரித்த யோகிதா, எம்.காம்., பட்டம் பெற்றவர்.

திருமணமாகி, குழந்தைகள் பிறந்த பின், 2010ல் தொழிலை நிறுத்திவிட்டு, குழந்தைகள் வளர்ப்பில் ஈடுபட்டார். அவரது கணவர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். 2017ல் தம்பதி ஒன்று சேர்ந்து, 'எஸ்.எஸ்.வி., புட்ஸ்' தேங்காய் பால் நிலக்கடலை தயாரிக்கும் தொழிலை மீண்டும் துவக்கினர்.

தொழில் சூடுபிடித்த நிலையில், கொரோனாபரவியதால், தொழில் மந்தமானது. சிறு தொழிலுக்கு அரசின் நிதியுதவி பெற, பெயரை பதிவு செய்து கொண்டனர்.

அரசின் நிதியுதவிக்காக அலைய வேண்டியிருக்கும் என, தம்பதி நினைத்தனர். ஆனால் அதிகாரிகள், தம்பதியின் உற்பத்தியின் சிறப்பை அறிந்து, அவர்களை நேரில் சந்தித்து ஆவணங்களை பெற்று கொண்டு, இரண்டே மாதங்களில் 14.80 லட்சம் ரூபாய் மானியம் வழங்கினர்.

மானிய தொகை உட்பட, 32 லட்சம் ரூபாய் செலவிட்டு, தொழில் நிறுவனத்தை துவக்கினர். தொழிலும் மளமளவென வளர்ந்தது. தந்தையின் நிலக்கடலை ஆசை, மகளை தொழிலதிபராக்கியது.

இது குறித்து, யோகிதா கூறியதாவது:

அரசின் நிதியுதவியுடன், எங்கள் நிறுவனம் அதி வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. சாதாரண நொறுக்கு தீனியை வைத்து, நாங்கள் செய்த முயற்சி, இன்று எங்களுக்கு புதிய வாழ்க்கையை அளித்துள்ளது. தற்போது ஆண்டுக்கு 60 லட்சம் ரூபாய் வியாபாரம் நடக்கிறது. அடுத்த ஆண்டு 1 கோடி ரூபாயை எட்டும் என, எதிர்பார்க்கிறோம்.

வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், ஏற்பாடு நடக்கிறது. என் கணவரின் ஒத்துழைப்பில், தொழில் சிறப்பாக நடக்கிறது.

எஸ்.எஸ்.புட்ஸ் தயாரிப்புகள் பெற விரும்புவோர் 98452 63716 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் - .






      Dinamalar
      Follow us