தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ 'அனிமேஷன்' டாக்டர் பட்டம் பெற்றுள்ள ஜீதா

 'அனிமேஷன்' டாக்டர் பட்டம் பெற்றுள்ள ஜீதா

 'அனிமேஷன்' டாக்டர் பட்டம் பெற்றுள்ள ஜீதா


ADDED : ஜூன் 28, 2026 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 10:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

'அனிமேஷன்' என்பது வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல. கல்வித்திறனுக்கும் உதவுகிறது. இந்த அற்புதமான கலையில், பேராசிரியர் ஜீதா ஆராய்ச்சி செய்து, பிஹெச்.டி., பட்டம் பெற்றுள்ளார்.

தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜீதா, 40. இவர் பெங்களூரு, ஜெயநகரின், 'அரேனா அனிமேஷன்' கல்லுாரியில், அனிமேஷன் இன்ஜினியரிங் படித்தவர்.

தற்போது உஜிரேவின் ஸ்ரீனிவாஸ் பல்கலைக்கழகத்தின், 'இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் டூரிசம்' நிறுவனத்தில் அனிமேஷன் மற்றும் டிஜிட்டல் பிலிம் மேக்கிங் பிரிவு தலைவராக பணியாற்றுகிறார். இந்த துறையில் இவருக்கு, 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

ஜீதாவுக்கு 2டி அனிமேஷன், ஸ்டோரி போர்டிங், ஸ்க்ரிப்ட் ரைட்டிங், கேரக்டர் டிசைன் போன்ற விஷயங்களில், அபார ஞானம் பெற்றவர். இந்த துறையில் மேலும் சாதனை செய்வது, அவரது குறிக்கோளாக இருந்தது.

அனிமேஷனில் மேலும் ஆராய்ச்சி செய்தார். சிறார்களின் திறனை வளர்ப்பதில், அனிமேஷன் எந்த வகையில் உதவும். விஷயத்தில் அனிமேஷனின் பங்களிப்பு, சிறப்பு தேவைகள் உள்ள மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு, வழக்கமான முறையில் கல்வி போதிப்பதை விட அனிமேஷன் அடிப்படையிலான நவீன முறையில், கல்வி கற்பித்தால் அவர்களின் அறிவுத்திறன் மேம்பட, எப்படி உதவும் என்பது குறித்து, ஆராய்ச்சி செய்துள்ளார்.

இவரது ஆராய்ச்சி, சிறார்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு, பெரிதும் உதவும்.

வருங்காலத்தில் மாற்றுத்திறனாளி சிறார்களை வளர்க்க, பெரிதும் உதவும். கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அனிமேஷன் குறித்து, மிக சிறப்பாக ஆராய்ச்சி செய்து சமர்ப்பித்த ஜீதாவுக்கு, ஸ்ரீனிவாஸ் பல்கலைக்கழகம், பிஹெச்.டி., பட்டத்தைவழங்கியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us