/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
கனரக ஓட்டுநர் உரிமம் பெற்ற கர்நாடகாவின் முதல் திருநங்கை
/
கனரக ஓட்டுநர் உரிமம் பெற்ற கர்நாடகாவின் முதல் திருநங்கை
கனரக ஓட்டுநர் உரிமம் பெற்ற கர்நாடகாவின் முதல் திருநங்கை
கனரக ஓட்டுநர் உரிமம் பெற்ற கர்நாடகாவின் முதல் திருநங்கை
ADDED : ஆக 11, 2025 04:40 AM

இன்றைய காலத்தில், திருநங்கைகள் அனைத்து துறைகளில் சாதிக்கின்றனர். இந்த வரிசையில் அனிதா பிரசாத், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற, கர்நாடகாவின் முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்று உள்ளார். இவர், மைசூரை சேர்ந்தவர்.
திருநங்கைகளை ஏள னமாக பார்க்கும் சமுதாயத்தில், அவர்களின் நலனுக்காக, போராட்டம் நடத்துபவர் அனிதா பிரசாத். இவர் 'ஹியூமானிடேரியன் பவுண்டேஷன்' மற்றும் 'விஸ்தாரிக் ரோபோடிக்ஸ்' என்ற நிறுவனத்தை அமைத்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
ஒரு திருநங்கை, கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது, கர்நாடகாவில் முதன் முறையாகும். டிரான்ஸ்போர்ட் தொழிலில், திருநங்கைகள் யாரும் இல்லை. எனவே இத்தொழிலை துவக்கியுள்ளேன்.
டபுள் டெக்கர் எனது இன்ஜினியரிங் திறனை பயன்படுத்தி, டபுள் டெக்கர் பஸ்களை வடிவமைக்க வேண்டும் என்பது என் கனவாகும். பாலினம் மாற்றிக்கொண்ட ஆண்கள், பெண்களுக்கு பயிற்சியளித்து, டிரான்ஸ்போர்ட் தொழிலில் வேலை வாய்ப்பு அளிப்பேன். இந்தியாவில் முதல் முறையாக திருநங்கைகள் மூலம், சொகுசு டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் துவக்க வேண்டும் என, திட்டம் வகுத்திருந்தேன். என் கனவு நனவாகிறது.
இது குறித்து, மெர்சிடிஸ் பென்ஸ், வால்வோ நிறுவனங்களுடன் பேச்சு நடத்துகிறேன். முதற்கட்டமாக இரண்டு பஸ்களை, பெங்களூரு - பெலகாவி பாதையில் இயக்க முடிவு செய்துள்ளேன்; இப்பாதையில் சாலைகள் நன்றாக உள்ளன.
பெலகாவியில் இருந்து மும்பைக்கும் போக்குவரத்தை விஸ்தரிக்கும் ஆலோசனை உள்ளது. நான் பொறியியல் படித்துள்ளேன். ஐ.டி.,யில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. 'ஏர் பஸ் 380' விமானங்களை வடிவமைத்துள்ளேன். நான் விமான பைலட்டாகவும் இருந்துள்ளேன். ஆனால் கனரக வாகனம் எனக்கு இயக்க தெரியவில்லை. டிராஸ்ஸ்போர்ட் தொழில் துவக்க, டிரைவிங் தெரிந்திருக்க வேண்டும் என்பதால், கற்றுக்கொண்டேன்.
நான் அமெரிக்காவில், பிஹெச்.டி., பட்டம் பெற்றுள்ளேன். லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்சில் படித்தேன். 23 ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்தியாவுக்கு திரும்பினேன். முதல் கட்டமாக 600 திருநங்கைகளுக்கு தொழில் பயிற்சி அளித்துள்ளோம். தற்போது சுய தொழில் செய்கின்றனர். அவர்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்கி, 'ஸ்ரீஜன்' என்ற பெயரில் பிராண்ட் ஆக்கி, கடைகள் திறந்து விற்கிறோம்.
பிச்சை எடுக்க கூடாது தற்போது இரண்டாம் கட்டத்தில், டிரான்ஸ்போர்ட் தொழில் துவங்குகிறோம். திருநங்கைகள் பிச்சையெடுக்க கூடாது; பாலியல் தொழில் செய்ய வேண்டாம்; நல்ல முறையில் வாழ்க்கை நடத்த வேண்டும்.
பெங்களூரு விமான நிலையம் அருகில், 1 ஏக்கர் நிலத்தில் வெளி நாடுகளின் ஒருங்கிணைப்பில் ட்ரோன் தயாரிப்பு தொழில் துவங்கப்படுகிறது. திறமைசாலிகளை அடையாளம் கண்டு, அவர்களை முன்னேற்றுவோம். பணத்துக்காக நாங்கள் எதையும் செய்யவில்லை.
நான் ஜெர்மனியில் இருந்த போது, ஆணாக இருந்தேன். அப்போது எனக்கு திருமணமாகி, 20 வயது மகள் இருந்தார். ஆனால் நான் திருநங்கையானதால், மனைவியும், மகளும் என்னை விட்டு பிரிந்து சென்றனர்.
என் உடலில் ஏற்பட்ட மாற்றம் குறித்து விவரித்தும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. எனவே நாங்கள் ஜெனடிக்ஸ் குறித்து, மைசூரு பல்கலைக்கழகம், ஜெ.எஸ்.எஸ்., மற்றும் சில மருத்துவமனைகளின் ஒருங்கிணைப்பில், ஆய்வு செய்து வருகிறோம். இதற்காக நாங்கள் அரசிடம், எந்த நிதியுதவியும் பெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -