தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ கணவரை இழந்தும் மனம் தளராமல் கடின உழைப்பால் சாதித்த மீனாட்சி

 கணவரை இழந்தும் மனம் தளராமல் கடின உழைப்பால் சாதித்த மீனாட்சி

 கணவரை இழந்தும் மனம் தளராமல் கடின உழைப்பால் சாதித்த மீனாட்சி


ADDED : செப் 27, 2026 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 11:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர் -:

பெலகாவி மாவட்டம், மகாத்வார் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி சதானந்த், 50. இவர், 2003ம் ஆண்டு சதானந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி ஓராண்டுக்குள் சதானந்த் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். இது, மீனாட்சியை மன ரீதியாக பலவீனமடைய செய்தது.

அடுத்த என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பில் இருந்தார். அப்போது, தனக்கு தானே ஆறுதல் கூறிவிட்டு, ஹோட்டல் வைக்க முடிவு செய்தார்.

அதற்கு தேவையான பணம் இல்லாததால் தனக்கு தெரிந்தவர்களிடம் கடனாக சில ஆயிரம் ரூபாயை வாங்கினார். இதை வைத்து தனது வீட்டிலேயே தோசை, சப்பாத்தி போன்றவற்றை செய்தார்.

உணவு பொருட்களை பெரிய பாத்திரங்களில் கூடைகளில் போட்டு, அந்த கூடையை தனது தலையில் சுமந்து நடந்தே சென்று விற்பனை செய்தார்.

காலங்கள் மாறின... காட்சிகள் மாறின என்பது போல, 'மீனாட்சி புட்ஸ்' என்ற சிறிய கடையை துவங்கினார். இந்த கடையில் பாரம்பரிய உணவு பலகாரங்கள், இனிப்பு, கார வகைகளை விற்பனை செய்ய துவங்கினார். இந்த கடையை அமைப்பதற்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கடன் வாங்கினார்.

இந்த கடையில் பணிபுரிய 10க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கினார். தற்போது, அவரது கடையில் பல விதமான ஊறுகாய், பலகார வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன; நல்ல வருமானமும் ஈட்டி வருகிறார்.

இவரது உழைப்பை பாராட்டி கர்நாடக அரசு, மீனாட்சிக்கு 'கித்துார் ராணி சென்னம்மா விருது' வழங்கியது. தற்போது, பெலகாவி நகரில் மீனாட்சி புட்ஸ் கடை மிகவும் பிரபலம்.

தனது நீண்ட பயணம் குறித்து அவர் கூறியதாவது:

என் கணவர் மறைவுக்கு பின், வாழ்க்கையே முடிந்து விட்டதாக நினைத்தேன். இதிலிருந்து வெளியே வர சில காலம் தேவைப்பட்டது. தற்போது நான் ஒரு தொழில் முனைவோராக மாறி உள்ளேன். என்னிடம் 15 பேர் வேலை செய்கின்றனர். நல்ல பணம் சம்பாதிக்கிறேன். என்னை போன்ற ஒரு பெண்ணுக்கு வேலை வழங்கி, அவர் சுயமாக முன்னேறுவதை பார்க்கும் போதே மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us