sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

ஆடவள் அரங்கம்

/

ஜி.பி.எஸ்., டிராக்கர் தொழிலில் கலக்கும் மைசூரின் மமதா!

/

ஜி.பி.எஸ்., டிராக்கர் தொழிலில் கலக்கும் மைசூரின் மமதா!

ஜி.பி.எஸ்., டிராக்கர் தொழிலில் கலக்கும் மைசூரின் மமதா!

ஜி.பி.எஸ்., டிராக்கர் தொழிலில் கலக்கும் மைசூரின் மமதா!


ADDED : மே 18, 2025 08:41 PM

Google News

ADDED : மே 18, 2025 08:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சில வேலைகள், ஆண்களால் மட்டுமே செய்ய முடியும். பெண்களுக்கு சரிப்பட்டு வராது என்ற கருத்து பரவலாக இருந்தது. இந்த கருத்தை பெண்கள் தலை கீழாக்கியுள்ளனர். ஆட்டோ ஓட்டுவது முதல், விமானம் ஓட்டுவது வரை, பெண்கள் தொடாத தொழிலே இல்லை.

போலீஸ் துறை, ஐ.டி., -- -பி.டி., மருத்துவம், கலைத்துறை, தொழில் என, அனைத்திலும் கொடிகட்டி பறக்கின்றனர். இத்தகையவர்களில் மமதாவும் ஒருவர். வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., டிராக்கர் பொருத்துவதே இவரது தொழில்.

மைசூரு நகரை சேர்ந்தவர் மமதா, 35. இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இவர்களின் குடும்பம் அவ்வளவு வசதியானது அல்ல. மகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பது, மமதாவின் விருப்பம்.

சொந்தமாக தொழில் துவங்க திட்டமிட்டார். ஆண்கள் மட்டுமே செய்து வரும், 'ஜி.பி.எஸ். டிராக்கர்' தொழிலை கையில் எடுத்தார். பல இடையூறுகளை கடந்து, சிறிய முதலீட்டில் தொழிலை துவக்கி, வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

சிறிய அளவில் துவங்கி தற்போது 11 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார். மைசூரிலேயே ஜி.பி.எஸ்., டிராக்கர் தொழில் செய்யும் ஒரே பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மைசூரு முழுதும் இவர் பிரபலமடைந்துள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளாக மைசூரு, சாம்ராஜ் நகர், மடிகேரி மாவட்டங்களில், அரசு, தனியார் பள்ளி, கல்லுாரி வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., டிராக்கர் சாதனம் பொருத்துகிறார். வாகனங்கள் பயணிக்கும் பாதையை கண்காணிக்கவும், மாணவ - மாணவியரின் பாதுகாப்புக்காகவும், வாகனங்களில் இந்த சாதனம் உதவுகிறது. ஒருவேளை வாகனங்கள் திருடப்பட்டாலும், சாதனத்தின் உதவியுடன் எளிதாக கண்டுபிடிக்கலாம்.

டிராக்கர் பட்டனை அழுத்தினால் போதும், வாகனம் இருக்கும் இடத்தை துல்லியமாக காட்டும். இதே காரணத்தால், தற்போது பள்ளி, கல்லுாரி வாகனங்கள், அரசு, தனியார் பஸ்கள், வாகனங்கள், லாரிகள் உட்பட, அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ்., பொருத்துகின்றனர்.

இந்த தொழில் மமதாவுக்கு கைகொடுத்து உதவுகிறது. பள்ளி, கல்லுாரிகள் ஜி.பி.எஸ்., சாதனம் பொருத்தும் பொறுப்பை, மமதாவிடம் ஒப்படைத்துள்ளன. அவரும் சாதனம் பொருத்துவதுடன், நிர்வகிக்கவும் செய்கிறார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது. கணவரின் வருவாய் போதவில்லை. குடும்பம் நடத்த முடியவில்லை என, புலம்பியபடி காலம் தள்ளாமல், தனக்கு தெரிந்த தொழிலை வைத்து வாழ்க்கையில் முன்னேறலாம். பொருளாரத்தை உயர்த்தி கொள்ளலாம் என்பதற்கு, மமதா ஒரு சிறந்த உதாரணம். தன் மகளை நல்ல முறையில் வளர்க்கிறார்.

அது மட்டுமின்றி, 11 பேருக்கு வேலை கொடுத்து, அவர்களின் பொருளாதாரம் உயர வழி செய்துள்ளார். மன உறுதி, விடா முயற்சி இருந்தால் பெண்களாலும் தொழில்நுட்ப உலகில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us