ADDED : ஜூலை 10, 2025 11:14 PM
வெற்றி
தேசிய அளவில் நடந்த யோனேக்ஸ் சன்ரைஸ் சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டியில், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட இரு பிரிவுகளிலும் நம் மாநிலத்தை சேர்ந்த ஷைனா நடராஜன் பதக்கம் பெற்று அசத்தி உள்ளார்.
13 அணிகள் முன்னிலை
கர்நாடகா கிரிக்கெட் சங்கம் நடத்தும் ஜி.கஸ்தூரிரங்கன் நினைவு கோப்பை டி - 20 லீக் போட்டி விறுவிறுப்பாக நடக்கிறது. மொத்தம் 46 அணிகள் பங்கேற்ற போட்டியில் இரண்டாவது சுற்று நடக்கிறது. தற்போது, 8 புள்ளிகள் பெற்று, 13 அணிகள் முன்னிலையில் உள்ளன.
நன்றி... நன்றி...
ஒலிம்பிக் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் 'என்.சி., கிளாசிக்' ஈட்டி எறிதல் போட்டி பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதற்காக கர்நாடக ஒலிம்பிக் அசோஷியஷன் மற்றும் கர்நாடகா அரசுக்கும் நீரஜ் சோப்ரா மனமார நன்றி தெரிவித்து உள்ளார்.
மவுன விரதம்
ஆர்.சி.பி., அணி நடத்திய வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இது, அணி நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. இதனால், எப்போதும் 'எக்ஸ்' வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆர்.சி.பி., அணி நிர்வாகம், அன்றிலிருந்து இதுவரை ஒரு மாதத்திற்கும் மேலாக பதிவு செய்யாமல் மவுனம் காத்து வருகிறது.
கார் ரேசில் நடிகர்
இந்தியன் ரேசிங் திருவிழா 'எப்.1., கார் ரேஸ்' வரும் ஆகஸ்ட்டில் துவங்க உள்ளது. இதில், உள்நாட்டு, வெளிநாட்டு அணிகள் என பல அணிகள் பங்குபெறும். இப்போட்டி கார் ரேசில் உலக அளவில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இப்போட்டியில் பெங்களூரு அணியும் கலந்து கொள்ள உள்ளது.
இந்த அணியை, கன்னட நடிகர் கிச்சா சுதீப் அதிகாரப்பூர்வமாக வாங்கி உள்ளார். அதுமட்டுமின்றி அவரே தூதராக இருக்க முடிவு செய்து உள்ளார். இதற்கு ' கிச்சா கிங்ஸ் பெங்களூரு' என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், சினிமாவிலிருந்து தொழில் முறை விளையாட்டு போட்டிகளிலும் தன்னை அடையாளபடுத்த முடிவு செய்து உள்ளார். இவரின் முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.