தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கர்நாடகாவின் பிரியங்காவுக்கு 2 தங்கம்
தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கர்நாடகாவின் பிரியங்காவுக்கு 2 தங்கம்
ADDED : மார் 27, 2026 05:27 AM

- நமது நிருபர் -:
ஒடிசாவில் நடந்த தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், கர்நாடகாவின் பிரியங்கா இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று அசத்தினார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், முதல் தேசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 24, 25ம் தேதிகளில் நடந்தது. இதில், கர்நாடகா சார்பில் பங்கேற்ற மாண்டியாவை சேர்ந்த பிரியங்கா, முதல் நாள் நடந்த 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், இரண்டாம் நாள் நடந்த 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் தங்கப்பதக்கத்தை வென்றார்.
பெங்களூரில் உள்ள தேசிய சிறப்பு மையத்தில், ஓ.பி.ஜெய்ஷாவிடம் பயிற்சி பெற்று வரும், 22 வயதான பிரியங்கா, கடந்த ஜூலையில் சீனாவில் நடக்க உள்ள, 23 வயதுக்கு உட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதை இலக்காக வைத்துள்ளார். 60 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், மஹாராஷ்டிராவின் ஹரிதா பத்ரா, 7.32 வினாடிகளில் கடந்த தங்கமும், பெங்களூரின் 21 வயதான உன்னதி அய்யப்பா, 7.46 வினாடிகளில் வந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அதேபோன்று 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், உத்தர பிரதேசத்தின் சலோனி 53.73 வினாடியில் தங்கம் வென்றார். உன்னதி, 56.45 வினாடிகளில் வெண்கலம் பெற்றார்.
