தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடுகளம்/ ஸ்னுாக்கர் போட்டியில் கோலோச்சும் பெங்களூரின் நடசா சேத்தன் 

 ஸ்னுாக்கர் போட்டியில் கோலோச்சும் பெங்களூரின் நடசா சேத்தன் 

 ஸ்னுாக்கர் போட்டியில் கோலோச்சும் பெங்களூரின் நடசா சேத்தன் 


ADDED : மே 15, 2026 03:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 03:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

பில்லியர்ட்ஸ் விளையாட்டு குடும்பத்தை சேர்ந்த ஒன்றாக, ஸ்னுாக்கர் விளையாட்டு பார்க்கப்படுகிறது. சதுர வடிவில் இருக்கும் மேஜையின் நடுவில் வைக்கப்பட்டு உள்ள பந்துகளை, ஸ்னுாக்கர் குச்சியை பயன்படுத்தி துல்லியமாக பாக்கெட்டுகளில் போட்டு அதிக புள்ளிகளை பெற்று வெற்றி பெறுவதே இந்த விளையாட்டின் நோக்கம்.

இந்த போட்டியில் பெங்களூரின் நடசா சேத்தன், 19 புதிய நட்சத்திர வீராங்கனையாக உருவெடுத்து உள்ளார். இத்தனைக்கும் சிறு வயதில் இருந்தே அவர் ஸ்னுாக்கர் விளையாடவில்லை. ஆறு ஆண்டுகளாக தான் விளையாடுகிறார். ஆரம்பத்தில் இருந்து விளையாட்டின் நுட்பங்களை கற்று கொண்டதால், அவரால் விளையாட்டில் சாதிக்க முடிகிறது.

இதுகுறித்து நடசா சேத்தன் கூறியதாவது:

பள்ளியில் படிக்கும் போது இருந்தே ஸ்னுாக்கர் விளையாடுகிறேன். அப்போதும் சரி, இப்போதும் சரி; ஸ்னுாக்கர் பயிற்சிக்காக தினமும் நான்கு மணி நேரம் ஒதுக்குகிறேன்.

தோழிகளுடன் சேர்ந்து இரவு விருந்துக்கு செல்வது; சினிமாவுக்கு செல்வது போன்றவைகளை நான் செய்ததே இல்லை. நான் அதிகம் நேசிக்கும் ஸ்னுாக்கர் போட்டியில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும். நான் விளையாட ஆரம்பித்த புதிதில் எனது 13 வயது வயதில் மாநில அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றேன். 16 வயதில் சாம்பியன் பட்டம் வென்றேன்.

எனக்கு பக்கபலமாக இருப்பவர் எனது அம்மா லீனா தான். போட்டி நடக்கும் இடங்களுக்கு என்னுடன் வந்து ஊக்கம் அளிப்பார். எனது தோழிகளும் என்னை உற்சாகப்படுத்தி உள்ளனர். சிறந்த இலக்கை நோக்கி செல்லும் போது போராட்டம், தியாகம், எதிர்பார்ப்புகளின் தொடர்ச்சியான அழுத்தம் ஆகியவற்றை சமாளித்து செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடசா குறித்து அவரது தாய் லீனா கூறுகையில், ''நடசாவின் செல்ல பெயர் டியா. அவர் முதன்முதலாக 13 வயதில் ஸ்னுாக்கர் விளையாடிய போது, அவர் விளையாடிய விதத்தை பார்த்து மெய்சிலித்து போனேன். கண்டிப்பாக ஒரு நாள் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று நினைத்தேன். அது 3 ஆண்டுகளில் நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

''ஸ்னுாக்கர் தான் இப்போது நடசாவின் முன்னுரிமையாக உள்ளது. படிப்பு எல்லாம் இரண்டாவது தான். பங்கஜ் அத்வானி தான் நடசாவின் ரோல் மாடல். ஸ்னுாக்கரில் அவர் இன்னும் நிறைய சாதிப்பார்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us