/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒரே நாளில் 75 ஜிம்மில் உடற்பயிற்சி சென்னை 'பாடி பில்டர்' அசத்தல்
/
ஒரே நாளில் 75 ஜிம்மில் உடற்பயிற்சி சென்னை 'பாடி பில்டர்' அசத்தல்
ஒரே நாளில் 75 ஜிம்மில் உடற்பயிற்சி சென்னை 'பாடி பில்டர்' அசத்தல்
ஒரே நாளில் 75 ஜிம்மில் உடற்பயிற்சி சென்னை 'பாடி பில்டர்' அசத்தல்
ADDED : நவ 28, 2025 05:39 AM

சென்னையின் ராயபுரம், காசிமேட்டை சேர்ந்தவர் ஹரிஷ், 23. பாடி பில்டரான இவர், பெங்களூரில் உள்ள பீக் பாயின்ட் ரெக்கார்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம், கின்னஸ் சாதனை முயற்சிக்காக பெங்களூரில் ஒரே நாளில் 75 ஜிம்மில் உடற்பயிற்சி செய்து அசத்தி உள்ளார்.
கடந்த 25ம் தேதி காலை 5:30 மணிக்கு உடற்பயிற்சியை துவங்கியவர் மறுநாள் காலை 5:30 மணி வரை 24 மணி நேரத்தில், அக் ஷய் நகர், கோடிசிக்கனஹள்ளி, பி.டி.எம்., லே - அவுட், ஜெயநகர், மடிவாளா, கோரமங்களா, ஐ.டி.ஐ., லே - அவுட், ஹெச்.எஸ்.ஆர்., லே -அவுட், ஹொசா ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள, ஜிம்களுக்கு சென்று உடற் பயிற்சி செய்தார்.
இதுகுறித்து ஹரிஷ் கூறியதாவது:
என் அப்பா விக்னேஷ் காசிமேட்டில் மீன் பிடி தொழில் செய்கிறார். 4 வயதாக இருக்கும் போதே, விளையாட்டின் மீது ஆர்வம் வந்தது.
ஓட்டப்பந்தய வீரராக இருந்தேன். ஜிம்னாஸ்டிக், யோகாவிலும் நிறைய பதக்கம் வென்று உள்ளேன்.
ஜிம்னாஸ்டிக் பயிற்சியின் போது கீழே விழுந்ததில் கை உடைந்தது. கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஓய்வில் இருந்தேன். பின், கை, உடல் வலிமைக்காக உடற்பயிற்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பின், உடலை மெருகேற்றி பாடி பில்டராக மாறினேன். இப்போதும் கூட ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று வருகிறேன்.
பெங்களூரில் ஒரே நாளில் 75 ஜிம்மில் உடற்பயிற்சி செய்து உள்ளேன்.
இதற்கு முந்தைய சாதனையாக ஒரே நாளில் 52 ஜிம்மில் உடற்பயிற்சி செய்தது இருந்தது. தற்போது, அந்த சாதனையை முறியடித்து உள்ளேன்.
ராயபுரம் பகுதியில் வசிக்கும் இளைஞர்களுக்கு ஓட்டப்பந்தய பயிற்சி அளிப்பதுடன், உடலை கட்டுப்கோப்பாக வைத்திருப்பது எப்படி என்றும் ஆலோசனை வழங்குகிறேன்.
உடற்பயிற்சியை நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக வைத்து கொள்ள வேண்டும். இளம் விளையாட்டு வீரர்களுக்கு நிறைய ஆதரவு தேவைப்படுகிறது. பலருக்கு ஆதரவு கிடைப்பது இல்லை. விளையாட்டின் மீது ஆர்வமாக இருந்தால் வாழ்க்கையில், நம்மால் பெரிய இலக்கை அடைய முடியும். விளையாட்டு மட்டுமின்றி, படிப்பின் மீதும் ஆர்வம் உள்ளது. எனது குடும்பத்தில் முதல் பட்டதாரி, நான் தான்.
குடும்ப வறுமையால் ஜிம்மிற்கு செல்ல முடியவில்லை; ஜிம்மிற்கு செல்ல நேரம் கிடைக்கவில்லை என்று நினைப்பவர்களுக்கு, harish_wushu H A R S H I K _ R E O என்ற சமூக வலைதள கணக்கு மூலம், ஆலோசனை வழங்குகிறேன்.
வீடியோக்களை பார்ப்பதன் மூலம் எனக்கு கிடைக்கும் பணத்தில், பாடி பில்டிங் பயிற்சியில் ஈடுபடும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு, உதவி செய்து வருகிறேன். அடுத்த மாதம் ஆசிய அளவில் நடக்கும் பாடிபில்டர் போட்டியில் பங்கேற்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

