உள்ளடக்கத்திற்கு செல்ல
இன்று முதல் மூன்று நாட்கள் பெங்களூரில் செஸ் போட்டி
இன்று முதல் மூன்று நாட்கள் பெங்களூரில் செஸ் போட்டி
ADDED : மே 15, 2026 03:32 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: பெங்களூரில் இன்று முதல் மூன்று நாட்கள் செஸ் எனும், சதுரங்க போட்டி நடக்க உள்ளது.
பெங்களூரு ரூரல் மாவட்ட சதுரங்க சங்கம் இன்று முதல், 17ம் தேதி வரை மூன்று நாட்கள் சதுரங்க போட்டியை நடத்த உள்ளது. ஒயிட்பீல்டு - ஹொஸ்கோட் பிரதான சாலையில், கட்டமநல்லுார் கேட் அருகில் உள்ள, மஞ்சுநாத சாமி திருமண மண்டபத்தில் போட்டி நடக்க உள்ளது.
இந்த போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பவர்கள், தேசிய அமெச்சூர் சாம்பியன்ஷிப் போட்டியில், கர்நாடக அணி சார்பில் விளையாட வாய்ப்பு பெறுவர். போட்டியின் பரிசு தொகை மூன்று லட்சம் ரூபாய் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் www.circlechess.com என்ற இணைய முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், சிதானந்தா என்பவரை 96634 05589 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
