sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

ஆடுகளம்

/

விஜய் ஹசாரே கிரிக்கெட் 4 போட்டிகளில் கர்நாடகா வெற்றி

/

விஜய் ஹசாரே கிரிக்கெட் 4 போட்டிகளில் கர்நாடகா வெற்றி

விஜய் ஹசாரே கிரிக்கெட் 4 போட்டிகளில் கர்நாடகா வெற்றி

விஜய் ஹசாரே கிரிக்கெட் 4 போட்டிகளில் கர்நாடகா வெற்றி


ADDED : ஜன 02, 2026 06:01 AM

Google News

ADDED : ஜன 02, 2026 06:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் விஜய் ஹசாரோ கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசன், அதாவது, 2025 - 26ம் ஆண்டுக்கான போட்டியில், 38 அணிகள் மோதுகின்றன.

முதல் போட்டி கடந்த டிச., 24ம் தேதி துவங்கியது. எலைட் அணி, 'ஏ' பிரிவில் கர்நாடகா உட்பட எட்டு அணிகள் உள்ளன. இதில், கர்நாடகா தனது முதல் போட்டியை, ஜார்க்கண்ட் அணியுடன் மோதியது. அந்த அணி 50 ஓவரில் 412க்கு 9 விக்கெட்டுகளை இழந்து, இமாலய ஸ்கோர் எடுத்திருந்தது. அடுத்து களம் இறங்கிய கர்நாடக அணி வீரர்கள், 47.3 ஓவரில், 5 விக்கெட் இழப்புக்கு, 413 ரன்கள் எடுத்து சாதனை படைத்தனர்.

இரண்டாவது போட்டி, கேரள அணியுடன் மோதியது. இதில், கேரள அணி, 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு, 284 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய கர்நாடக அணி, 48.2 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு, 284 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மூன்றாவது போட்டி, தமிழகத்துடன் மோதியது. தமிழக அணி, 49.5 ஓவரில், 288 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த நம் மாநில வீரர்கள், 47.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து, 293 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

நேற்று முன்தினம் (2025 டிச., 31ம் தேதி) நடந்த போட்டியில், கர்நாடக அணி, 'டாஸ்' வென்றது. முதலில் அணி கேப்டன் மாயங்க் அகர்வால், தேவதத் படிக்கல் களம் இறங்கினர். புதுச்சேரி அணி பவுலர்களின் பந்துகளை இருவரும் சேர்ந்து நாலாபுறமும் விரட்டினர்.

துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இருவரும் இணைந்து 228 ரன்கள் எடுத்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினர். படிக்கல், 116 பந்துகளுக்கு 113 ரன்கள் எடுத்தபோது, ஜெயந்த் யாதவ் பந்தில் அவுட்டானார். அதற்கு அடுத்து வந்த கருண் நாயர், சிறப்பாக விளையாடினார்.

அணி கேப்டன் மாயங்க் அகர்வால், 124 பந்துகளுக்கு 132 ரன்கள் எடுத்திருந்தபோது, சிதக் சிங் பந்தில் அவுட்டானர். கருண் நாயருடன், ஸ்மரன் ரவிசந்திரன் இணைந்தார்.

இருவரும் சேர்ந்து 50 ரன்கள் எடுத்திருந்த போது, ஸ்மரன் ரவிச்சந்திரன் 17 பந்துக்கு 21 ரன்களில் அவுட்டானார். அதன் பின் வந்த மன்வந்த் குமார், 4 பந்துகளுக்கு 3 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அபிநவ் மனோகர் 6 பந்துகளில் 21 ரன்கள் விளாசினார்.

கர்நாடக அணி, 50 ஓவருக்கு 4 விக்கெட் இழப்புக்கு, 363 ரன்கள் எடுத்தது.

அதை தொடர்ந்து புதுச்சேரி அணி களம் இறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக நியான் ஷியாம் கங்காயன், அஜய் ரோஹிரா களம் இறங்கினர். இருவரும் சேர்ந்து 84 பந்துகளுக்கு 78 ரன்கள் எடுத்தனர்.

அஜய் ரோஹிரா 41 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தபோது, ஸ்ரீஷா ஆச்சார் பந்தில் போல்டானார். அதன் பின், ஜஸ்வந்த் ஸ்ரீராம் களம் இறங்கினார். இவர் நிதானமாக ஆட, நியான் ஷியாம் கங்கயன் பந்துகளை சிதறவிட்டார்.

ஜஸ்வந்த் ஸ்ரீராம், 21 பந்தில் 14 ரன்கள் எடுத்திருந்தபோது, கருண் நாயர் பந்தில் அவுட்டானார். அதன் பின் வந்த வீரர்கள் அணி கேப்டன் அமன் கான், 20 பந்துகளில் 34 ரன்களிலும்; விக்னேஸ்வரன் மாரிமுத்து 44 பந்துகளில் 31 ரன்களும்; ஜெயந்த் ஜாதவ், 35 பந்துகளில் 54 ரன்களும்; சிதாக் சிங், 22 பந்துகளில் 27 ரன்களும்; சாகர் உதேசி ஒரு பந்தில் 'பூஜ்யம்' என அனைவரும் சொர்ப்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 50 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து, 296 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் கர்நாடக அணி, 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விஜய் ஹசாரே போட்டி துவங்கியதில் இருந்து 'ஏ' பிரிவில் உள்ள கர்நாடக அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று, அணி வரிசையில், 0.616 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அதுபோன்று, மத்திய பிரதேச அணியும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று, 0.935 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது

- நமது நிருபர் -: .






      Dinamalar
      Follow us