sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

ஆடுகளம்

/

ஷிவமொக்காவின் பெருமை பறை சாற்றும் ஹாக்கி வீரர்

/

ஷிவமொக்காவின் பெருமை பறை சாற்றும் ஹாக்கி வீரர்

ஷிவமொக்காவின் பெருமை பறை சாற்றும் ஹாக்கி வீரர்

ஷிவமொக்காவின் பெருமை பறை சாற்றும் ஹாக்கி வீரர்


ADDED : ஜூன் 19, 2025 11:41 PM

Google News

ADDED : ஜூன் 19, 2025 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொக்கா என்றால், பசுமையான இயற்கை காட்சிகள், நீர் வீழ்ச்சிகள், வானுயர்ந்த மலைகள் நம் கண் முன்னே வந்து செல்லும்.

இந்த மாவட்டத்தின் 20 வயது இளைஞர் சுனில், ஹாக்கி விளையாட்டில் சாதனைகள் செய்து, மாவட்டத்தின் பெருமையை உயர்த்துகிறார்.

ஷிவமொக்கா மாவட்டம், சொரபா தாலுகாவின் தல்லுாரா கிராமத்தில் வசிக்கும் பாலாக்ஷப்பாவின் மகன் சுனில், 20. இவர் சிறந்த ஹாக்கி விளையாட்டு வீரர்.

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன், பள்ளி மாணவராக இருந்த போது, இவருக்கு அதிர்ஷ்டம் தேடி வந்தது. ஹாக்கி பயிற்சியாளர் சுந்தரேஷ் என்பவர், விளையாட்டு ஆர்வம் கொண்ட சிறார்களை அடையாளம் காண, சுனிலின் பள்ளிக்கு வந்திருந்தார்.

வியப்பு


மாணவர்களிடையே விளையாட்டு தொடர்பான சோதனைகள் நடத்தினார். இதில் சுனிலின் திறமையை கண்டு வியப்படைந்தார்.

ஹாக்கி விளையாட விருப்பமா என, சுந்தரேஷ் கேட்டார். சுனிலும் ஆர்வத்துடன் சம்மதித்தார்.

சர்வோதயா பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தார். 2015ல் ஷிவமொக்காவில் விளையாட்டு வீரர்கள் விடுதியில் தங்கினார். சுந்தரேஷிடம் பயிற்சி பெற துவங்கினார்.

பி.யு.சி., முடித்த பின், பட்டப்படிப்புக்காக பெங்களூரு வந்து, சுரானா கல்லுாரியில் சேர்ந்தார்.

ஹாக்கி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றார். 2022ல் கர்நாடகா ஜூனியர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 2023ல் கர்நாடகா சார்பில் விளையாடினார். 2024ல் ஜலந்தரில் நடந்த ஜூனியர் தேசிய சாம்பியன் விளையாட்டில் பங்கேற்று, கர்நாடகாவை நான்காவது இடம் பெற வைத்தார்.

நடப்பாண்டு ஜனவரியில் நடந்த போட்டியில், சீனியர் அணியில் விளையாடி, தங்கப்பதக்கம் பெற்றார்.

பெர்லின்


இதுவரை கர்நாடகாவுக்காக விளையாடிய சுனில், இப்போது இந்தியாவுக்காக விளையாட, மேற்கு ஐரோப்பாவின் பெர்லின் செல்ல தயாராகிறார்.

சுனில் கூறியதாவது:

கூலி வேலை செய்த என் தந்தை பாலாக்ஷப்பாவுக்கு, வயதாகிவிட்டது. சமீப நாட்களாக பணிக்கு செல்வது இல்லை.

என் தாயார் ரத்னம்மாவும், அண்ணன் சந்தீப்பும் தினக்கூலி விவசாய தொழிலாளியாகவும், கட்டட பணியாளராகவும் பணியாற்றி, எங்களை காப்பாற்றுகின்றனர்.

பின்தங்கிய கிராமத்தில் இருந்து வந்த நான், ஹாக்கி விளையாட்டு வீரனாவேன் என, கனவிலும் நினைக்கவில்லை. இந்தியாவுக்காக விளையாட தயாராகிறேன். இது என் வாழ்க்கையில், பொன்னான நேரம்.

இதற்கான பெருமை என் முதல் குரு சுந்தரேஷ் அய்யாவை சாரும். கிராமத்தில் இருந்து, என்னை ஷிவமொக்காவுக்கு அழைத்து சென்று, ஹாக்கி விளையாட்டு வீரராக்கினார். எங்கள் அணி சிறப்பாக விளையாடுகிறது.

தமிழகத்தை சேர்ந்த கவியரசன், அங்கிதா, புதுச்சேரியின் ஹரிஹரன், கூர்கின் வெங்கடேஷ், பெங்களூரின் விஜய் உட்பட, பலர் எனக்கு பயிற்சி அளித்து விளையாட்டு வீரனாக்கினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தைரியசாலியான விளையாட்டு வீரரான சுனில், மிகுந்த திறமைசாலி. ஏற்கனவே கர்நாடகாவுக்காக விளையாடி, பல பதக்கங்கள் வென்றுள்ளார். இப்போது பெர்லின் நாட்டில் நடக்கும் ஹாக்கி போட்டியில், இந்திய அணியில் சுனிலும் இடம் பெற்றுள்ளார். வரும் நாட்களில் ஏஷியன் கேம்ஸ் மற்றும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்கள் வென்று நம் நாட்டுக்கு பெருமை சேர்ப்பார் என, நாங்கள் நம்புகிறோம்.

- சுந்தரேஷ், பயிற்சியாளர்

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us