தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/ஆடுகளம்/ ஸ்பெயின் கார் ரேஸ் சாம்பியன்ஷிப் இந்தியாவின் டீன் மஸ்கரேனாஸ் பங்கேற்பு

 ஸ்பெயின் கார் ரேஸ் சாம்பியன்ஷிப் இந்தியாவின் டீன் மஸ்கரேனாஸ் பங்கேற்பு

 ஸ்பெயின் கார் ரேஸ் சாம்பியன்ஷிப் இந்தியாவின் டீன் மஸ்கரேனாஸ் பங்கேற்பு


ADDED : மார் 27, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

ஸ்பெயினில் அடுத்த மாதம் நடக்கும், உலக கார் ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் டீன் மஸ்கரேனாஸ் பங்கேற்கிறார்.

ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவில், அடுத்த மாதம் உலக கார் ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது.

ஐந்தாவது சுற்று ரேஸில் இந்தியா சார்பில், கர்நாடகாவின் மங்களூரின் டீன் மஸ்கரேனாஸ், ரேசராகவும், குடகின் ககன், துணை ரேசராகவும் பங்கேற்ற உள்ளனர்.

இந்தியாவின் நரேன் குமார், கவுரவ் கில்லுக்கு பின், உலக கார் ரேஸ் சாம்பியன்ஷிப்பில், இந்தியா சார்பில் ரேசராக பங்கேற்கும் மூன்றாவது வீரர் டீன் மஸ்கரேனாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா நாட்டின் பி.ஹெச்.ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த போர்டு பீஸ்டா ரேலி - 3 காரை அவர் ஓட்டுவார்.

இந்த காரின் அறிமுக நிகழ்ச்சி, பெங்களூரில் நடந்தது. ரேஸில் நிறைய சாதனை படைத்த கர்ணா கடூர் பங்கேற்றார்.

போட்டி குறித்து டீன் மஸ்கரேனாஸ் கூறுகையில், ''ஸ்பெயினில் நடக்கும் சாம்பியன்ஷிப் போட்டிக்காக, நானும், ககனும் முழுமையாக தயாராகி உள்ளோம்.

''சிறப்பாக செயல்படுவோம் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறோம். நாங்கள் இணைந்து சாதிப்போம் என்று நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us